Saturday, November 9, 2024
Home > பொழுதுபோக்கு > அவனை பிடித்து ஜெயிலில் அடையுங்கள்..! கொதித்தெழுந்த மோகன் ஜி சத்ரியன்..!

அவனை பிடித்து ஜெயிலில் அடையுங்கள்..! கொதித்தெழுந்த மோகன் ஜி சத்ரியன்..!

22-12-21/11.39am

சென்னை : தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் இயக்குனர் மோகன் ஜி சத்ரியன். உண்மை சம்பவங்களை அதன் நிஜம் மாறாமல் தத்ரூபமாய் எடுக்க கூடிய ஒரு நல்ல படைப்பாளி. பொதுவெளியில் தனது கருத்துக்களை நாகரிகமாக எடுத்து கூறுவார். அதேவேளையில் கோபப்பட்டு பொதுவெளியில் அநாகரிகமாக நடந்தது இல்லை.

ஆனால் அவரையே கொந்தளிக்க வைத்துள்ளது ஒரு கானா பாடல். தமிழ் திரையுலகில் 60 களிலேயே கானா பாடல் நுழைந்திருந்தாலும் கானா பாடல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தேனிசை தென்றல் தேவா அவர்கள். அவர் பாணியை தொடரும் புள்ளிங்கோக்கள் கானா என்ற பெயரில் கண்ட கண்ட கருத்துக்களை பண்பாடு கலாச்சாரத்துக்கு ஒவ்வாத வரிகளை மெட்டுக்கட்டி கானா என்கிற பெயரில் காதுக்குள் வெடி வைப்பதை சகிக்க முடியவில்லை என்றாலும் ஒரு கூட்டத்தினர் அதை ரசிக்கவே செய்கிறார்கள்.

அதிலும் சமீபத்தில் வந்த ஒரு கானா பாடலில் நட்புக்காக வெட்டுவோம் உருவுவோம் குடலை என்கிற ரீதியில் மிக வன்மமாக பாடியிருந்தனர். அதையும் ஒரு கூட்டம் டப்ஸ்மாஷ் பண்ணிதிரிந்தது காலக்கொடுமை. தற்போது தமிழகத்தில் நிலவும் சூழலை பார்த்தால் கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இப்படி கானா பாடலாக பாடிவிட்டால் அரசு கண்டுகொள்ளாது போலிருக்கிறது.

`

அதைவிட பா.ரஞ்சித் எனும் புரட்சிப்போராளி இயக்குனர் தனது படங்களில் பெண்களை மேட்டர் முடித்து விட்டால் எங்கேயும் போக மாட்டார்கள் என திராவிடம் கூறும் தமிழ் உலகிற்கு புது தத்துவத்தை அளித்தவர். இதை வேத வாக்காக மன்னிக்கவும் நீலம் வாக்காக எடுத்துக் கொண்ட புள்ளிங்கோஸ் தற்போது வெளியிட்டிருக்கும் அதுவும் ஒரு மேடையில் பாடியிருக்கும் பாடல் நம்மை போன்ற சராசரி பெண்குழந்தைகள் பெற்றவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.

```
```

அந்த பாடலில் ” எல்கேஜி படிக்கையில குச்சி மிட்டாய் வாங்கி கொடுத்தேன். அஞ்சாப்பு படிக்கையில பூந்தி திங்க வச்சேன். எட்டாப்பு படிக்கையில வாந்தி எடுக்க வச்சேன், ஏன் தெரியுமா. அப்போ தான் அந்த பிகர் நம்மள விட்டு போகாது” என வரி அமைத்து தலையில் பல நிறங்களோடு முடி அமைத்து மேடையில் பாடியிருக்கிறார் அந்த புள்ளிங்கோ. இதை தனது ட்விட்டரில் பகிர்ந்த மோகன் இவரை போக்ஸோ சட்டத்தில் சிறையிலடையுங்கள் என சீறியிருக்கிறார்.

…..உங்கள் பீமா