6-4-22/16.33PM
சேலம் : உலகின் மிக உயரமான முருகர் திருமேனி சிலை சேலம் மாவட்டம் புத்திரக்கவுண்டம்பாளையத்தில் இன்று திறக்கப்பட்டது. பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
மலேசியாவில் உள்ள முருகர் சிலை உலகிலேயே பெரிய சிலை என கூறப்பட்டது. அதன் உயரம் 140 அடியாகும். தற்போது சேலத்தில் திறக்கப்பட சிலையின் உயரம் 146 அடி என கருதப்படுகிறது. இந்த சிலையை நிறுவியவர் முத்துமலை முருகர் டிரஸ்ட் சேர்மன் ஸ்ரீதர்.
இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ” அனைத்து மக்களும் மலேசியா சென்று வழிபட முடியாது.
ஆனால் அவர்களால் எளிதாக சேலம் வந்து முத்துமலை முருகனை வழிபடமுடியும்” என தெரிவித்தார். மேலும் ஸ்ரீதர் 2014ல் தனது சொந்த நிலத்தில் சுவாமி முருகனுக்கு சிலை எழுப்ப தீர்மானித்தார்.
அதற்காக மலேசியா முருகன் சிலையை நிர்மாணித்த திருவாரூர் தியாகராஜனை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் நேற்று மாலை டிரஸ்ட் சார்பில் பூமி பூஜை நடத்தப்பட்டது. இன்று புதன்கிழமை காலை திருமேனிசிலைக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பக்தர்கள் அங்கே குழுமினர். ஹெலிகாப்டர் மூலம் ரோஜா இதழ்கள் சிலை மீது தூவப்பட்டது.
….உங்கள் பீமா