Wednesday, March 19, 2025
Home > செய்திகள் > பிஜேபி எம்பி வீட்டருகே வெடிகுண்டு வீச்சு..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

பிஜேபி எம்பி வீட்டருகே வெடிகுண்டு வீச்சு..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

“மேற்கு வங்க மம்தா தலைமையிலான அரசு எதிர்கட்சியினரை பழிவாங்குகிறது. பிஜேபி தொண்டர்களை கொலை செய்து வருகிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப்போயிருக்கிறது. மம்தா தனது அரசியல் எதிரிகளை குண்டர்களை வைத்து பழிவாங்குகிறார்” என மேற்கு வங்க பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொல்கொத்தா 24 பர்கானாஸ் பகுதியில் இருக்கும் பிஜேபி எம்பியான அர்ஜுன் சிங் அவர்களின் வீட்டருகே இன்று நண்பகல் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. அதில் யாருக்கும் எந்த காயமும் இல்லை. எம்பி அர்ஜுன் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்து FIR பதிவு செய்திருக்கிறார்.

`

ஏற்கனவே 24 மணிநேரத்திற்கு முன்பாக இதே போல ஒரு குண்டு வெடித்திருந்தது. அதை விசாரித்துக் கொண்டிருந்த NIA தற்போது இந்த வழக்கையும் கையிலெடுத்திருக்கிறது. இதுகுறித்து எம்பி அர்ஜுன்சிங் தெரிவிக்கையில் ” மேற்கு வங்க காவல்துறை முதல்வரின் கைப்பாவையாக இருக்கிறது. குற்றம் செய்ப்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை அவர்களை காவல்துறை பாதுகாக்கிறது.

```
```

இந்த குண்டு வெடிப்புக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் தொடர்பிருக்கிறது. இவ்வளவு சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது என்று விசாரிக்க வேண்டும்.இது தொடர்பாக FIR பதிவு செய்துள்ளேன்.” என தெரிவித்தார்.மேலும் அந்த குண்டுவெடிப்பு தொடர்பான CCTV காட்சிகளையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

…. உங்கள் பீமா