Thursday, March 28, 2024
Home > செய்திகள் > பிரிவினைவாதி உமர் காலித்தை விடுதலை செய்ய கோரிக்கை..!! குழுவின் பின்னணி என்ன..?

பிரிவினைவாதி உமர் காலித்தை விடுதலை செய்ய கோரிக்கை..!! குழுவின் பின்னணி என்ன..?

கடந்த 2020 பிப்ரவரி மாதம் நார்த் ஈஸ்ட் டெல்லி ஷாகின் பாக்கில் வன்முறை வெடித்தது. இதில் 53க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தேசமே கதறி அழுதது. இதற்க்கு மூளையாக இருந்த உமர்காலித் மற்றும் ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த தாஹிர் உசைன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதில் தாஹிர் ஹுசைன் குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைந்தான். அதையடுத்து 2020 செப்டம்பர் 14 அன்று உமர் கைதுசெய்யப்பட்டான். ஷாகின் கலவரம் வெடிக்கும் முன்னரே இரண்டுமாதங்களாக அந்த இடத்தில் கூட்டம் கூட்டி தேசத்துக்கு எதிரான கருத்துக்களை பேசியிருக்கிறான். மேலும் JNU கல்லூரி வளாகத்திலும் கன்ஹையா குமார் என்பனுடன் சேர்ந்து திட்டங்கள் வகுத்திருக்கிறான். பிரிவினையை தூண்டும் விதமாக பேசியுள்ளான்.வன்முறையை தூண்டவேண்டும் என்பதே அவனது நோக்கமாக இருந்தது என தாஹிர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

`

அவனை கைது செய்த போலீசார் UAPA சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்து ஜெயிலில் அடைத்தனர். இன்றோடு ஒரு வருடம் முடிகிறது. அதனால் சமூக ஆர்வலர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலர் மற்றும் சில அமைப்புகள் மற்றும் சில டெல்லியை சேர்ந்த கட்சி தலைவர்கள் உமர் காலித்தை விடுதலை செய்யவேண்டும் என கோரிக்கை எழுப்புகின்றனர்.

```
```

உமர் காலித் அப்பாவி எனவும் அவனை வேண்டுமென்றே சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். அவனை சிறையில் வைத்திருப்பது சட்டத்துக்கு புறம்பானது என கூக்குரலிட்டு வருகின்றனர். இதை ஒரு தேசிய ஊடகமும் ஒளிபரப்புகிறது.

இதுகுறித்து கலவரத்தில் பாதிக்கப்பட்டோர் கூறுகையில் ” அவன் பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக பேசியதுடன் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையும் தாக்க தூண்டினான். முதலில் இந்த சமூக ஆர்வலர்கள் என கூறிக்கொள்ளும் இவர்களின் பின்னணி என்ன என்பதை அரசு கண்டறிய வேண்டும். ஒரு குற்றவாளிக்கு உதவும் நோக்கில் பேசுகிறார்கள் எனில் அவர்களது வங்கி கணக்கை ஆராய வேண்டும். அவனை விட இவர்களே பேராபத்தானவர்கள்.” என கூறினர்.