Friday, June 2, 2023
Home > செய்திகள் > சிரிக்காம படிங்க..! சோம்நாத் கோவிலை காப்பாற்றியது இவர்களா..! அடடே இது தெரியாம போச்சே..!

சிரிக்காம படிங்க..! சோம்நாத் கோவிலை காப்பாற்றியது இவர்களா..! அடடே இது தெரியாம போச்சே..!

4-11-21/18.25pm

பத்திரிக்கை துறை என்பது செய்திகள் வழங்குவது என்ற நிலை மாறி தங்கள் சொந்த கருத்துக்களை மக்கள் மீது திணிக்கும் துறையாக மாறிவிட்டதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தற்போது சோம்நாத் கோவில் பற்றி வெளிவந்த ஒரு கட்டுரை மக்களை கொதிப்படைய செய்துள்ளது.

இந்தியாவில் இந்துத்துவம் இஸ்லாமையும் தர்மத்தையும் புறக்கணிக்கிறது என்கிற தலைப்பில் தி வயர் எனும் பத்திரிக்கையில் பிரேம் சங்கர் என்பவர் எழுதியுள்ள ஒரு கட்டுரை தற்போது மிக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதில் இஸ்லாம் மற்றும் கிறித்தவம் மட்டுமே மதமாகவும் இந்து மற்றும் பௌத்தம் ஆகியவை மாய மதம் எனவும் குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது போன்ற பத்திரிக்கைகள் மதசார்பற்ற நாடான இந்தியாவில் சமூக மோதலை உருவாக்க உள்நோக்கத்தோடு செயல்படுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் அந்த கட்டுரையில் அரேபிய வணிகர்கள் 8 மற்றும் 9ம் நூற்றாண்டுகளில் குஜராத் வந்ததாகவும் மசூதிகளை கட்டி அங்கேயே தங்கியதாகவும்,

`

இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகு கஜினி சோம்நாத் கோவிலை தாக்க முயன்றபோது அதைக்காக்க அரேபியர்கள் முயற்சி செய்து உயிர்விட்டதாகவும் அதில் வரலாறு திரித்து எழுதப்பட்டிருக்கிறது. இதற்க்கு பல்வேறு தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

மேலும் #arabs என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா

#thewire #somnathtemple #arabs #savours #kajni #mohamed