13-4-22/15.13pm
திருச்சூர் : கேரளாவில் வருகிற வெள்ளிக்கிழமை விஷு பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி ஹிந்து கலாச்சாரப்படி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைநீட்டம் (படிக்காசு) கொடுப்பது மரபு. இதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அந்தஸ்து ஜாதி பேதம் இல்லாமல் ஒருவருக்கொருவர் கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் பிஜேபி எம்பி சுரேஷ்கோபி திருச்சூர் வடக்கு நாதன் கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது அவர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் தலைமை அர்ச்சகர்களுக்கு ஒரு ரூபாய் நோட்டாக ஆயிரம்பேருக்கு மேலானோர்க்கு வழங்கினார். கைநீட்டம் வாங்கினால் வருடம் முழுவதும் பணம் தங்கும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.
முக்கிய செய்தி : சவுதியில் நர்சாக பணிபுரியும் மேரி ஜோசப் ஜெஷின் என்பவரை மணந்துகொண்டார். திருவம்பாடி பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் இது லவ்ஜிஹாத் என போர்க்குரல். இல்லை என DYFI மறுப்பு. ஷெஜின் ஒரு கம்யூனிஸ்ட் பிரமுகர்.

மேலும் கைநீட்டம் செய்வதும் புண்ணியமாக கருதப்படுகிறது. சுரேஷ் கோபி திருச்சூர் மட்டுமன்றி பரமேக்காவு திருவம்பாடி போன்ற கோவில்களிலும் தலைமை அர்ச்சகர்கள் உட்பட அனைவருக்கும் கைநீட்டம் வழங்கினார். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.பாலசந்திரன் சுரேஷ் கோபி அரசியல் செய்கிறார் என விமர்சித்துள்ளார்.

மேலும் இந்த திருச்சூர் கோவில் கொச்சின் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. இதன் தலைவராக இருப்பவர் கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என கூறப்படுகிறது. அதனால் கைநீட்டம் எந்த ஒரு அர்ச்சகரும் வாங்க கூடாது என உடனடியாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் சில தேவசம் போர்டுகளின் மூலம் பிஜேபி எம்பி சுரேஷ் கோபி கைநீட்டம் கொடுப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

சுரேஷ் கோபி ரிசர்வ் வங்கியின் மூலம் ஒருலட்ச ரூபாய்க்கான ஒரு ரூபாய் தாள்களாக மாற்றி கடந்த ஞாயிறு முதல் கைநீட்டம் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா