Wednesday, May 1, 2024
Home > செய்திகள் > இஸ்லாமியர்கள் அனுமதியுடன் புதுப்பிக்கப்பட்ட நூற்றாண்டு கோவில்..!!

இஸ்லாமியர்கள் அனுமதியுடன் புதுப்பிக்கப்பட்ட நூற்றாண்டு கோவில்..!!

7-2-22/13.40pm

மங்களூரு : நூற்றாண்டு பழமையான இந்துக்களின் கோவிலை புனரமைக்க அந்த பகுதி இஸ்லாமிய மக்கள் பெருந்தன்மையுடன் அனுமதி கோவிலை புனரமைக்க உதவி செய்தது மங்களூரு மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

மங்களூருவிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புத்தூர் அருகே அமைந்துள்ளது சார்வே கிராமம். இங்கு எண்ணூறு வருட பழமையான ஏலியா ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலை பலமுறை புனரமைக்க முயன்றும் பக்தர்களால் முடியாமல் போனது. இங்கு 40 சதவிகித இஸ்லாமியர்களும் 40 சதவிகித ஹிந்துக்களும் வாழ்வதாக தெரிகிறது.

கடந்த 2019ல் மீண்டும் கோவில் புனரமைப்புக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் பொறுப்பாளராக பிரசன்னா என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் அந்த பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மற்றும் மாற்றுமத மக்களிடம் கோவில் அதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்து வந்தார். அதன்பின்னர் இஸ்லாமிய பெருமக்கள் சகிப்பு தன்மையுடனும் பெருந்தன்மையுடனும் கோவிலை புனரமைக்க சம்மதம் தெரிவித்ததோடு தங்களால் இயன்ற உதவியும் செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.

`

அதன்பின்னர் பல வாட்சப் குழுக்கள் அமைக்கப்பட்டு நிதிதிரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. மேலும் பல தன்னார்வலர்கள் புனரமைப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். கிராம மக்கள் மட்டுமல்லாமல் பல பக்தர்களின் பங்களிப்பில் இரண்டுகோடி நிதி சேர்ந்ததாகவும் கோவில் புனரமைப்பு பணிகள் சிறப்பாக முடிந்ததாகவும் பிரசன்னா தெரிவித்தார். மேலும் நேற்று அந்த கோவிலின் பிரம்மகாலோத்சவம் சிறப்பாக நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

```
```

“இந்துக்களின் கோவிலை புனரமைக்க சம்மதம் தெரிவித்து உதவிய இஸ்லாமிய மக்களுடன் நல்லிணக்கத்தை கொண்டாடும் பொருட்டு கோவிலை திருவிழாவின் ஒருபகுதியாக உரூஸ் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த கோவிலை கலாசார அடையாளமாக மாற்றிக்காட்டியுள்ளோம்” என பிரசன்னா தெரிவித்தார்.

….உங்கள் பீமா