22-3-22/12.18pm
லக்னோ : கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி தலைமையிலான பிஜேபி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரிலிருந்து முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி தனது மேலவை பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2017ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிஜேபி அபரிமிதமான வெற்றியை பெற்றது. முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி உத்திரபிரதேச சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வருகிற மார்ச் 25 அன்று யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.தான் போட்டியிட்ட கோரக்பூர் தொகுதியில் 1.03.390 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை தோற்கடித்துள்ளார். மேலும் 37 வருடங்களில் முழு பதவிக்காலத்தையும் முடித்து இரண்டாவது முறையாக முதலமைச்சர் பதவியேற்கும் முதல் முதல்வர் யோகி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2017ல் இருந்து மேலசட்டசபையில் பதவி வகித்த யோகி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் மார்ச் இறுதியில் பதவியேற்ற பின்னர் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது.
…..உங்கள் பீமா