Friday, March 24, 2023
Home > அரசியல் > வெறித்தனம்..! மொத்த நகராட்சி சீட்டுக்களையும் தூக்கிய பிஜேபி..! மக்கள் கொண்டாட்டம்..!

வெறித்தனம்..! மொத்த நகராட்சி சீட்டுக்களையும் தூக்கிய பிஜேபி..! மக்கள் கொண்டாட்டம்..!

28-11-21/14.55pm

திரிபுரா : திரிபுராவில் 200 சீட்டுகளுக்கான நகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. அதில் 95% சதவிகித சீட்டுக்களை முதல்வர் பிப்லப் குமார் தலைமையிலான பிஜேபி கைப்பற்றியது.

திரிபுராவில் நகராட்சிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 334 சீட்டுக்களில் ஏற்கனவே 112 இடங்களை பிஜேபி கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள 200 இடங்களில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 200 நகராட்சிகளில் 190 சீட்டுக்களை பிஜேபி மொத்தமாக கைப்பற்றி மீண்டும் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மற்றும் மேற்கு வங்க முதல்வரான மமதா தனது கட்சியை விஸ்தரிக்க எண்ணி நான்கு மாநிலங்களில் கட்சியை துவக்கினார். மேகாலயா மற்றும் திரிபுராவில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் தலைமையிலான குழு ஒன்றை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்திருந்தார்.

`

மேலும் தனது மருமகனான அபிஷேக் பானர்ஜியையும் சில முக்கிய தலைவர்களையும் திரிபுரா அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சென்ற திரிணமூல் குழு சில அரசியல் சேட்டைகளை செய்ய ஆரம்பித்தது. அபிஷேக் தனது காரை பிஜேபியினர் அடித்து நொறுக்கிவிட்டனர் என புகாரளித்தார். விசாரணையில் அது பொய் என தெரிய வந்தது.

பின்னர் முதல்வர் பிப்லப் மீதே மம்தா புகாரளித்த வேடிக்கையும் நடந்தது. இதனிடையே காங்கிரசும் தனது பங்குக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தது. இதையெல்லாம் உற்று நோக்கிய திரிபுரா மக்கள் நடந்த நகராட்சி தேர்தலில் தங்களுக்கான கட்சியை தேர்ந்தெடுத்து விட்டனர். இது மோடியின் தலைமையிலான பிஜேபிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

…..உங்கள் பீமா