1-4-22/8.22AM
சென்னை : மேற்குமாம்பலத்தில் அமைந்திருக்கும் அயோத்திமண்டபம் ஸ்ரீராம் சமாஜம் எனும் தனியார் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த மண்டபத்தை கடந்த மாதம் ஹிந்துசமய அறநிலையத்துறை கையகப்படுத்தியது. மேற்குமாம்பலத்தில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பழிக்குப்பழியாக நடந்திருப்பதாக ஹிந்து அமைப்புகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீராம் சமாஜதலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “மண்டபம் கோவில் இல்லை. ஆகம சாஸ்திரப்படி பொதுமக்கள் வழிபட எந்த ஒரு உருவச்சிலையும் நிறுவப்படவில்லை. ராமர் சீதை மற்றும் ஹனுமான் உருவப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது” என குறிப்பிட்டிருந்தார்.

.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி “2013 டிசம்பர் 31 அன்று பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவின் மூலம் ஹிந்து சமய அறநிலையத்துறை அயோத்யா மண்டபத்தை தற்போது HR &CE கையகப்படுத்தியுள்ளது. மண்டபத்தின் விவகாரங்களை நிர்வகிக்க மட்டுமே ஒருவர் நியமிக்கப்பட்டார். சிலைகள் நிறுவுதல் மற்றும் பூஜைகள் நடத்துவது தொடர்பாக மற்றும் பொதுக்கோவிலா இல்லையா என்பதில் தகராறு உள்ளதால் இந்த மனு நிராகரிக்கப்படுகிறது” என .தீர்ப்பளித்தார்.
மேலும் ரிட் மனுவின் மூலம் இதை முடிவு செய்யமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். HR &CEதனது வாதத்தில் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து உண்டியல் மூலம் காணிக்கை வசூல் செய்யப்பட்டிருக்கிறது. இது பொதுக்கோவில் என வாதிட்டது. மாற்றுமத வழிபாட்டுத்தலங்களிலும் காணிக்கைகள் வசூலிக்கப்படுகிறது அதனால் அவற்றையும் அரசுடைமையாக்கிக்கொள்ளுமா HR &CE என ஹிந்து அமைப்பினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
…..உங்கள் பீமா