Friday, March 24, 2023
Home > அரசியல் > கார்த்திக் கோபிநாத் கைது..! வலுக்கும் கண்டனங்கள்..!

கார்த்திக் கோபிநாத் கைது..! வலுக்கும் கண்டனங்கள்..!

சென்னை : திமுக அரசின் அரசியல் பழிவாங்கல் கைதுகள் எதிர்க்கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் மீது நடத்தப்படும் என நினைத்திருந்தவேளையில் பாரம்பரியமிக்க திமுக யூடியூபர் ட்விட்டர் பிரபலம் சமூகவலைத்தளங்களில் கேள்வியெழுப்புபவர்கள் என தொடர்ந்து கைதுசெய்து தனது மதிப்பை குறைத்துக்கொள்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் சமூக துரோகிகளால் சிறுவாச்சூர் அம்மன் கோவில் தகர்க்கப்பட்டது. தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கும் நிலையில் கோவிலை மறுசீரமைக்க ஹிந்து தன்னார்வலர்கள் சிலர் முன்வந்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர். கார்த்திக் கோபிநாத் என்பவர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக தெரிகிறது.

மேலும் மிலாப் எனும் செயலி மூலம் 50000 வரை சேகரித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் குளறுபடி இருப்பதாகவும் பணத்தை கார்த்திக் ஏமாற்றிவிட்டதாகவும் கூறி ஆவடி காவல்துறையினர் கார்த்திக்கை கைதுசெய்துள்ளனர். ஆனால் மிலாப் இல் இருக்கும் நிதியை ஒரு ரூபாய் கூட எடுக்காமல் தனது சொந்த பணத்தை வைத்து கார்த்திக் கோவிலை மறுசீரமைத்துள்ளார் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திக் கோபிநாத்துடன் கூடவே இருந்த சிலர் அவர் மீது இருக்கும் பொறாமையால் பொய்யான புகார் அளித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் சேகரித்த நிதியின் விவரங்கள் மற்றும் கோவிலை மறுசீரமைக்க ஆன செலவுகள் உள்ளிட்ட கணக்குகளை கார்த்திக் ஆவணப்படுத்தியிருப்பதாகவும் ஆதாரங்களும் தெளிவாக இருப்பதாகவும் கார்த்திக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிஜேபி தலைவர்களான அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஹெச்.ராஜா, “சென்ற செப்டம்பர் மாதம் இந்துவிரோத சக்திகளால் சேதப்படுத்தப்பட்ட சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலை இன்றுவரை புனர் நிர்மாணம் செய்யாமல் பொழுதுபோக்கும் அனைத்து அறநிலையத்துறை அதிகாரிகளும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்.

`

சென்ற செப்டம்பர் மாதம் இந்துவிரோத சக்திகளால் சேதப்படுத்தப்பட்ட சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலை இன்றுவரை புனர் நிர்மாணம் செய்யாமல் பொழுதுபோக்கும் அனைத்து அறநிலையத்துறை அதிகாரிகளும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்” என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.