Sunday, June 28, 2026
Home > அரசியல் > பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் இப்படியா..? பங்கமாக கலாய்த்த கே.பாக்யராஜ்

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் இப்படியா..? பங்கமாக கலாய்த்த கே.பாக்யராஜ்

20-4-22/ 15.21PM

சென்னை : பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சிப்பவர்களை தனது பாணியில் நகைச்சுவையாக கிண்டலடித்துள்ளார் இயக்குனர் கே.பாக்யராஜ். இதற்க்கு சிலர் தற்போதே இணையத்தில் கதறிவருகின்றனர்.

சென்னை பிஜேபி தலைமையகமான கமலாலயத்தில் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் 2022 என்ற நூலின் வெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூலை திரு.அண்ணாமலை வெளியிட்டார். நூலை பிரபல இயக்குனரும் நடிகருமான திரு.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். நூலை பெற்றுக்கொண்ட கே.பாக்யராஜ் கூட்டத்தினர் மத்தியில் உரையாற்றினார்.

“பிஜேபி மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது பெருமைக்குரிய ஒன்று. அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபோது பெங்களூரில் சிறப்பாக பணியாற்றினார் என பலரும் பாராட்டியுள்ளனர். நான் கர்நாடகா சென்றிருந்தபோது அவரைப்பற்றி பேசியது எனக்கு ஆச்சர்யமாக .
இருந்தது. அந்தவகையில் தமிழகத்துக்கு சிறப்பான ஒருவர் பிஜேபி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பலரும் பிரதமர் மோடி வெளிநாடு சென்றதை விமர்சிப்பார்கள். உண்மையில் பயணிப்பதற்க்கான உடல் தகுதி இருப்பதால் அடிக்கடி வெளிநாடு செல்கிறார். இந்த விஷயத்தை இத்தனை நாடுகளுக்கு எப்படி ஓய்வில்லாமல் செல்கிறார். அவர் உடலை எப்படி வைத்துக்கொள்கிறார் என்று தான் நான் பார்ப்பேன். இந்தியாவிற்கு இப்படிப்பட்ட உத்வேகமிகுந்த பிரதமர் தான் தேவை. வெளிநாடு சென்றாலும் இந்தியாவில் எந்த இடத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் பங்கேற்பார்.

அந்தவகையில் சிறப்பாக செயல்படும் பிரதமர் அவர். இன்னும் சொல்லவேண்டுமெனில் காஷ்மீர் பிரச்சினை இலங்கை பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவர்மீது விமர்சனம் இருக்கும். பலர் விமர்சனம் செய்தாலும் கூட எதற்கும் செவிசாய்க்காமல் இருக்கிறார். இக்கட்டான சூழல் வரும்போது அதை சமாளிப்பது மிக சிரமம். இன்னும் அவர்மீது விமர்சனம் வந்துகொண்டுதான் இருக்கிறது.

பிரதமருக்கு நான் ஒரு டிப்ஸ் தருகிறேன். விமர்சனம் செய்ப்பவர்கள் எல்லாம் மூன்று மாதத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என எண்ணிக்கொள்ளுங்கள். இவர்களை போன்றவர்கள் நல்லதை அவர்களும் பேசமாட்டார்கள்.நல்லதை சொன்னால் காதுகொடுத்தும் கேட்கமாட்டார்கள். நல்லதிட்டங்கள் மக்களிடம் சென்றடைந்தாலே அது பிரதமருக்கு பெருமைதான்.பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நூலை நான் பெற்றுக்கொண்டது எனக்கு பெருமையாக இருக்கிறது” என உரையாற்றினார்.

இனி கே.பாக்யராஜையும் சங்கி என்றோ அல்லது வேறு ஏதேனும் ஒரு பெயர்வைத்தோ இணையத்தில் விமர்சிக்கலாம் என கருத்து நிலவுகிறது. மேலும் சில நெட்டிசன்கள் இப்போதே பாக்யராஜை கடுமையாக தாக்கி பேச ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

……உங்கள் பீமா