Friday, March 29, 2024
Home > அரசியல் > திராவிட அரசியலை உணர்ந்துகொண்டாரா அண்ணாமலை..?

திராவிட அரசியலை உணர்ந்துகொண்டாரா அண்ணாமலை..?

9-3-22/16.01pm

மதுரை : தமிழக பிஜேபியில் அண்ணாமலை அவர்களின் வரவிற்குப்பின் பெரும் மாற்றம் நிகழத்தொடங்கியுள்ளதாக பிஜேபி தொண்டர்கள் சிலாகிக்கின்றனர். மேலும் சமீபத்தில் எட்டு மாவட்ட நிர்வாகிகளின் அதிராபை மாற்றம் கட்சியில் புதுரத்தம் பாய்ச்சியுள்ளதாக தெரிவிக்கின்றனர் கமலாலயவாசிகள்.

இந்நிலையில் திராவிடக்கட்சிகள் தங்களுக்கென சில மூத்தவர்களின் பெயர்களை பிம்பமாக கொண்டு அரசியல் செய்துவருவதை தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை தற்போது உணர்ந்துகொண்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதை தொடர்ந்தே காமராஜர் பசும்பொன் அய்யா தீரன்சின்னமலை போன்ற வரலாற்றுப்புகள் பெற்ற தலைவர்களை அண்ணாமலை கையிலெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட பிஜேபி இணையதள கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் பிஜேபி மறைந்த முதல்வர்கள் மற்றும் தேசியவாதிகளான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை முன்னெடுக்கவேண்டும் என கோரிக்கையெழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

`

இதனிடையே மதுரை சென்ற அண்ணாமலை தீரன்சின்னமலை பசும்பொன் அய்யா அவர்களின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். மேலும் இதுகுறித்து “மதுரை புறநகர் மாவட்டம் அலங்காநல்லூரில், தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகக் கருதிய ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கும் விடுதலை போராட்ட போரில் ஆங்கிலேயப் படைகளைத் துவம்சம் செய்து அவர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரர் தீரன் சின்னமலை..அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதில் மட்டற்ற மகிழ்ச்சி.

வழி நெடுக்க காத்திருந்து எங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த கட்சி தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். பாலாமேட்டில் மாற்றுக் கட்சியிலிருந்து பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் சமூக நீதி கொள்கையால் ஈர்க்கப்பட்டு நமது கட்சியில் இன்று இணைந்தனர். அவர்களின் மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

```
```

80 ஆண்டுகள் வரலாறு கொண்ட பாலமேடு, சத்திர வெள்ளாலபட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கடந்த 11 ஆண்டுகளாக தடை இருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த தடை நீங்கிய பின் விழாக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்டு மாடு பிடி வீரர்களின் சகசங்களைக் கண்டு வியந்தேன்” என கூறியுள்ளார்.

….உங்கள் பீமா