3-1-22/9.30am
சென்னை : வெள்ள நிவாரண நிதியாக ஆறு மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பதாகவும் தமிழகத்தை மட்டும் வஞ்சித்துவிட்டது போலவும் டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்க்கு தக்க ஆதாரங்களுடன் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பேரிடர் மற்றும் வெள்ளப்பாதிப்புகளுக்கு NDRF மூலம் நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம். இதில் SDRF எனப்படும் மாநில பேரிடர் நிதி தொகுப்பு மாநிலத்தின் நிதி பங்களிப்பும் மத்திய அரசின் நிதிப்பங்களிப்பும் இருக்கும். நிதியாண்டை கணக்கிட்டு அந்த வருடத்தில் மாநிலங்களில் ஏற்படும் பேரிடர் சேதாரங்களை சீரமைக்க மத்திய அரசு வருடந்தோறும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

கடந்த 30 டிசம்பரில் மத்திய அரசு மேற்குவங்கம் குஜராத் அஸ்ஸாம் கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு நிதியாண்டை கணக்கிட்டு 3063.21 கோடி ஒதுக்கியுள்ளது. ஏனைய மாநிலங்களுக்கு தமிழகத்தையும் சேர்த்து SDRF நிதியாக 17,747.20 கோடி விடுவித்துள்ளது. இதில் நவம்பர் மாதம் தமிழகத்திற்கு விடுவிக்கப்பட்ட 408 கோடியுடன் சேர்த்து 1000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதை தெளிவாக மத்திய பிரஸ் இன்பர்மேஷன் பீரோ தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்ள விரும்பாத இடது சாரிகள் மற்றும் திமுக ஆதரவு ஊடகங்கள் மக்களை மூளைச்சலவை செய்ய முயல்கின்றன. மேலும் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில் உண்மையை மறைத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதை கண்டித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசிடம் பெற்ற ஆயிரம்கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்றும் அதற்கான வெள்ளையறிக்கையை திமுக அரசு வெளியிடவேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
…..உங்கள் பீமா
