30-3-22/11.45AM
மும்பை : பிரபல அர்பன் நக்சல் ஆதரவு மற்றும் இடதுசாரி ஆதரவு பத்திரிகையாளரான ராணா அய்யூப் மும்பையிலிருந்து வெளிநாடு செல்ல முயற்சித்தபோது அமலாக்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்தியாவே கொரோனா சீனப்பெருந்தொற்றில் சிக்கியிருந்தபோது அதை காரணம் காட்டி தனது அறக்கட்டளைக்கு பலகோடி நிதி திரட்டினார் ராணா அய்யூப் என கூறப்படுகிறது. மேலும் நன்கொடை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளது. மூன்று கோடி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.
இதனிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் காசியாபாத்தை சேர்ந்த விகாஸ் என்பவர் ராணா மீது பணமோசடி புகார் அளித்திருந்தார். இதன்மீதான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும் ராணா வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 1 அன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை ராணாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் ராணா இந்திய ஜனநாயகம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்தும் பேச பெண் பத்திரிக்கையாளர்களால் நடத்தப்படும் கூட்டத்தில் பேச நேற்று லண்டன் செல்ல இருந்தார். அதற்காக மும்பை விமானநிலையம் சென்றார். தகவலறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மும்பை விமானநிலையத்தில் மடக்கிப்பிடித்தனர். மேலும் அவரை அலுவலகத்திற்கு வருமாறு கூறியதாக தெரிகிறது.
ராணா இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது மட்டுமில்லாமல் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் செய்தி வெளியிடுவதில் மற்றும் செய்திகளை திரித்துக்கூறுவதில் சிறந்தவர் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
……உங்கள் பீமா
