6-4-22/11.40AM
புதுதில்லி : இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாகவும் ரஷ்ய உக்ரைன் போர் குறித்து பொய்யான தகவல்கள் வெளியிட்டதற்காகவும் 22 யூ ட்யூப் சேனல்கள் மூன்று ட்விட்டர் கணக்குகள் ஒரு முகநூல் கணக்கு மற்றும் ஒரு இணையதள செய்தி தளம் ஆகியவை முடக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
ஐடி விதிகள் 2021ஐ மீறியதற்காக சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் ” இந்த 22 சேனல்களுடன் சேர்த்து இதுவரை 78 சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. நேற்று முடக்கப்பட்ட 22 சேனல்களில் இந்தியாவில் இருந்து 18 சேனல்களும் பாகிஸ்தானில் இருந்து 4 சேனல்களும் செயல்பட்டு வருகின்றன.

இதன் மொத்த பாராவியாளர்களின் எண்ணிக்கை 262 கோடிகள். இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதோடு இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு தேசியபாதுகாப்பு மற்ற நாடுகளுடனான உறவு ஆகியவற்றிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்திருக்கின்றன. மேலும் இந்த சேனல்கள் கோவிட் 19, ரஸ்யா உக்ரைன் போர் குறித்தும் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தியா உக்ரைன் மீது தாக்கியதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன” என குறிப்பிட்டார்.
சர்க்காரி நியூஸ், நியூஸ் 23,ஏஆர்பி நியூஸ், ஏ.ஓ.பி நியூஸ், கிசான் டாக் போன்ற சேனல்களின் பெயர்கள் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஏற்கனவே ஜனவரி மாதம் 35 யூ ட்யூப் சேனல்கள் மற்றும் நான்கு இணையதள செய்தி தளங்கள் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா
