Friday, May 3, 2024
Home > செய்திகள் > தஞ்சை தேர்திருவிழாவில் சோகம்..! பிஜேபி தலைவர்கள் இரங்கல்

தஞ்சை தேர்திருவிழாவில் சோகம்..! பிஜேபி தலைவர்கள் இரங்கல்

27-4-22/11.12AM

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் களிமேடு பகுதியில் நேற்று இரவு அப்பர் குருபூஜை 94ஆவது ஆண்டுவிழா நடைபெற்றது. திருவிழாவின் ஒருபகுதியாக நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலைவரை தேர்த்திருவிழா நடைபெற்றது. தேரானது களிமேடு பகுதியில் உள்ள பலதெருக்களின் வழியே கொண்டுவரப்பட்டது.

இன்று அதிகாலை மூன்று மணியளவில் மக்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்துவந்து கொண்டிருந்த நிலையில் மேலே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் எதிர்பாராவிதமாக உரசியது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் தேர் தீப்பற்றி எரிய தொடங்கியது.

இந்த கொடூர விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 12பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

`

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சோகமான சம்பவத்தை தொடர்ந்து பிஜேபி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

“தஞ்சை மாவட்டம் பூதலூர் சாலை அருகே களிமேடு அப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் தேர் உரசியதால், மின்சாரம் பாய்ந்து இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் ம‌ற்று‌ம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் நலமுடன் திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன்.
ஓம் சாந்தி.” என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

```
```

பாரதபிரதமர் மோடி இறந்தவர்களின் குடும்பத்திற்க்கு தலா இரண்டு லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50000மும் நிவாரண தொகையாக அறிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா