Saturday, October 5, 2024
Home > ஆன்மிகம் > தாராசுர இராஜராஜேஸ்வரம் கண்ட இரண்டாம் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இன்று

தாராசுர இராஜராஜேஸ்வரம் கண்ட இரண்டாம் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இன்று

தமிழ் கலாச்சாரத்தின் படி தமிழர்கள் பிறந்தநாளை நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடுவார்கள். ஆங்கில நாட்காட்டி படி 2022யின் சித்திரை உத்திரட்டாதி இன்று (28/04/2022), வீழ்ந்த வைணவத்தை மீளவெடுத்தவரும் புகழ்பெற்ற தாராசுரம் கோவிலைக் கட்டியவரும், சோழநாடு செழிக்காமல் இருக்க அன்றே காவிரியை அடைத்ததை எதிர்த்து இராஐராஜன் காலத்தில் சோழர் படை இயற்கையாக பாயும் காவிரிநீரை எப்படி அடைக்கலாம் என்று போரிட்டு அணையை உடைத்து காவிரியை சோழ நாட்டில் தவழவிட்டவறுமாண இரண்டாம் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இன்று.

இரண்டாம் ராஜராஜன் மற்றும் அவரது துணைவியார்

“சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ

வழியிட்ட வாள் காண வாரீர்”

– இராசராச சோழன் உலா

என்று ஒட்டக்கூத்தரால் இராசராச சோழன் உலாவில் புகழப்பட்டவருமான இரண்டாம் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இன்று. “சித்திரை உத்திரட்டாதி”. இதனை திருமாணிக்குழி கல்வெட்டு பின்வருமாறு சொல்கிறது !

`
திருமாணிக்குழி சோழர்கால கல்வெட்டு

மாமன்னன் பரகேசரி இரண்டாம் இராஜராஜன் தன்னுடைய தந்தை இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலேயே ஆட்சியில் பங்கேற்று தந்தை மறைவுக்கு பின்னர் மகுடம் சூட்டப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது, பொ.யு.பி 1146 முதல் இவனது கல்வெட்டுகள் கிடைக்கின்றன. தன் பாட்டனார் முதலாம் ராஜ ராஜனைப் போல் அழியாப் புகழ் அடைய விரும்பினார் இரண்டாம் இராஜராஜன், அதன் விளைவாக “வாழும் பிரம்மாண்ட சோழர்க் கோவில்கள்” வரிசையில் அமையும் வண்ணம் தானும் தாராசுரத்தில் ஐராவதேஸ்வரர் கோவிலை நிர்மானித்தார்.

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்

சோழேந்திர சிங்கன்,தெய்வப் பெருமாள்,கண்டன்,சொக்கப் பெருமாள்,இராச கம்பீரன் முதலிய பட்டப் பெயர்கள் இவனுக்கு உண்டு.

```
```

இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியைப் பற்றி பல கல்வெட்டுகள் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் அடங்கியுள்ள பல மெய்க்கீர்த்திகள் அவருடைய ஆட்சியின் நிலப்பரப்பையும் அவருக்கு அடங்கிய ஏராளமான சிற்றரசர்களின் பெயர்களையும் நிலைமைகளையும் தெரிவிக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி ஒரு செய்தியும் இல்லாததால், இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியைப் போலவே, இரண்டாம் இராஜராஜனின் ஆட்சியும் போர்கள் இல்லாமல் அமைதியாகவே இருந்தது.

தம் தந்தையை போல் சிவநேசன் ஆகிய ராஜ ராஜன் தன் தந்தைக் காலத்தே நிகழ்ந்த நிகழ்ச்சியால் வருத்தமுற்று இருந்த வைணவர்கள் மனத்துயர் தீரும் பொருட்டு வைணவத் தளங்களுக்கு சேவைப் புரிந்தார். ” விழுந்த அறி சமையத்தை மீளவேடுத்தனன்” -என்று இரண்டாம் இராஜராஜனின் மெய்க் கீர்த்தியில் பாடியுள்ளனர். இதன் மூலம் இரண்டாம் இராஜராஜனின் வைணவத் தொண்டினைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்

போர்களின் மீது ஆர்வம் அற்று இருந்த இவர், தனது சிவப் பக்தியை வெளிப் படுத்தும் வண்ணம் ராஜ ராஜேஸ்வரம் எனும் புகழ் பெற்ற கோவிலை எழுப்பினார். தென்னகத்தின் சிறந்த கலைக் கோவில்களில் ராஜ ராஜேஸ்வரமும் ஒன்றாகும். தன் பாட்டனின் பெயரைப் பெற்றிருந்த இவன், அவரைப் போலவே தனது புகழையும் சரித்திரத்தில் நிலைப் படுத்தும் பொருட்டு இந்தக் கலைக் கோவிலை கட்டினார்.