25-4-22/13.52PM
இந்தியா : சமீப வருடங்களாக ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தியும் அருவருக்கத்தக்க வகையில் பேசி புளகாங்கிதமடைந்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் பல உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் ஹிந்து தெய்வங்களின் புகைப்படங்களை ஆபாசமாக தங்களது பொருட்களில் வடிவமைத்து வருவதும் தொடர்கதையாகி உள்ளது.
சமீபத்தில் கழிவறை இருக்கையில் ஹிந்து கடவுளின் புகைப்படத்தை அச்சிட்டு அமேசான் நிறுவனம் விளமபரப்படுத்தியிருந்தது. மேலும் காலணிகள் உட்பட பலபொருள்களில் ஹிந்து தெய்வங்களின் உருவப்படத்தை அச்சிட்டு பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை கேலிக்குரியதாக்கியிருந்தது.

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த சஹாரா ரே என்பவரின் ஆடை நிறுவனம் தனது பங்குக்கு பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை அவமதித்துள்ளது.
அந்த நபருக்கு சொந்தமான உடைநிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளில் ஹிந்து தெய்வங்களின் உருவப்படத்தை அச்சிட்டு நெட்டிசன்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார்.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தனிப்பயன் என மாற்றியுள்ளார்.
…..உங்கள் பீமா