Monday, October 13, 2025
Home > செய்திகள் > கொந்தளிக்கும் கம்யூனிஸ்டுகள்..! என்ன செய்தார் தமிழக ஆளுநர்..?

கொந்தளிக்கும் கம்யூனிஸ்டுகள்..! என்ன செய்தார் தமிழக ஆளுநர்..?

13-4-22/12.42PM

சென்னை : தமிழகத்தில் ஆளுநரை ஆட்டுக்கு தாடி என விமர்சிக்கும் தரமற்ற பண்பு பலகாலமாக புரையோடிப்போய் இருக்கிறது. தமிழகத்தின் முன்னாள் ஆளுநரை ஒரு பெண்ணின் கன்னத்தை தட்டினார் என தரம்தாழ்ந்து விமர்சித்தனர் தமிழக அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது ஆதரவு மீடியாக்கள். இதனிடையே தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்கும் முன்னரே அவரை நீக்கக்கோரி திருமா மற்றும் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோர் குரல்கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் அவர்களின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிபிஐஎம் மாநில செயலாளர் கனகராஜ் “அத்துமீறுகிறாரா ஆளுநர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்பொறுப்பில் உள்ள டாக்டர் சுதா சேஷையன் அவர்களின் பதவிக்காலம்மேலும் ஓராண்டு ஆளுநரால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்தி

மத்தியபிரதேசம் கார்கொனில் ராமநவமியின்போது கல்லெறிந்த ஹசீனா பக்ரு என்பவரது வீட்டை போலீசார் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கினர். இந்த வீடு பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் கட்டப்பட்டதாகும்

கடந்த ஆண்டு டிசம்பர் 31 உடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.கடந்த டிசம்பரிலேயே புதிய துணைவேந்தரை நியமிக்க தேடுதல் குழு (search committee) அமைக்கப்பட்டு அந்தக் குழுவும் தனது பரிந்துரைகளை அளித்துவிட்டது.டாக்டர் சுதா சேஷைன் தொடர விருப்பம் தெரிவித்து மனுச் செய்யவில்லை.
இந்த நிலையில் இந்த நீட்டிப்பிற்கான காரணம் புரியாததாகவும் புதிராகவும் இருக்கிறது.

ஆளுநர் தேடுதல் குழுவின் பரிந்துரைகளுக்கு வெளியே ஒருவரை நியமிப்பது தொடர்கிறது. ஆளுநர் தன் அதிகார வரம்பை மீறுகிறாரா? ஊடகங்கள் இதைப்பற்றி வாய்திறக்காமல் இருப்பதன் மர்மம் என்ன.இந்த நீட்டிப்பிற்கான காரணம் எதையும் ஆளுநர் மாளிகை தெரிவிக்காமல் இருப்பது எதனால்” என தனது பதிவில் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

ஆனால் பாலிடெக்னிக் முடித்தமாணவர்கள் நேரடியாக எந்த ஒரு இளநிலை படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரலாம் என விதி இருந்தும் புதிதாக ஆணையிட்டது போல திமுக கூறுவதைப்பற்றியோ அல்லது எந்த ஒரு மத்திய பல்கலைக்கழகத்திலும் சேர பொதுநுழைவுத்தேர்வு பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் புதிதாக நுழைவுத்தேர்வு கொண்டுவருவதுபோல திமுக கூறுவதையோ சுட்டிக்காட்ட கம்யூனிஸ்டுகள் மறுக்கிறார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா