13-4-22/11.42AM
சென்னை : இந்திய சினிமாக்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்படும் பிராந்திய மொழி திரைப்படங்களில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது தெலுங்குமொழி படங்கள். தெலுங்கில் ராஜமௌலி, வம்சி, பூரி ஜெகந்நாத், திரிவிக்ரம் போன்ற படைப்பாளிகளின் வரவிற்கு பிறகு தெலுங்கு சினிமா உலகத்தரத்தை எட்டியுள்ளது. வசூலிலும் அள்ளிக்குவிக்கின்றன.
தெலுங்கு திரைப்படங்களில் மத உணர்வுகளை கொச்சைப்படுத்தாமல் அதேநேரத்தில் சிறுபான்மையின மக்களை தவறாக சித்தரிக்காமல் இந்திய இறையாண்மைக்கு எதிரான வசனங்கள் இல்லாமல் படைப்புகள் வெளியாவது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதேநேரத்தில் தமிழ் சினிமா மெல்ல மெல்ல தனது தனித்தன்மையை இழந்துவருவது குறிப்பிடத்தக்கது.செய்தி
முக்கிய செய்தி : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பஞ்சாப் தலைமை செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிளுடன் சந்திப்பு. தன்னை அழைக்காமல் தனது அதிகாரிகளை சந்தித்ததாக பஞ்சாப் முதல்வர் புலம்பல்
ஆளும் அரசை குறிப்பாக மத்திய மோடி அரசையும் கடந்த அதிமுக ஆட்சியையும் மட்டுமே குறைகூறுவதாக வெளிவந்த தமிழ் சினிமாக்கள் தற்போது தலையில் கைவைத்து உக்கார்ந்திருக்கிறது. விஜய்,சூர்யா போன்றோரின் படங்களில் நேரடியாக மத்திய அரசை தாக்கி வசனங்கள் அதேபோல ஹிந்து மக்களின் உணர்வை புண்படுத்தும்விதமான காட்சிகள் வலிந்து திணிக்கப்படும்.

இதைக்கண்டு ஹிந்து அமைப்புகள் மற்றும் பிஜேபி தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா போன்றோர் திரைப்படங்களுக்கு எதிராக போராட்டத்தை அறிவிக்க அது திரைப்படக்குழுவினருக்கு மறைமுக விளம்பரமாக அமைந்துவந்தது.

இந்நிலையில் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் தமிழ் திரைப்படங்கள் குறித்து கட்சி சார்பில் யாரும் விமர்சிக்க கூடாது என கூறியிருந்தார்.

அதையடுத்து பல திரைப்படங்கள் அதிலும் நாலடியார் படங்கள் ஊத்திக்கொண்டன. தற்போது வெளிவந்திருக்கும் விஜயின் பீஸ்ட் படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது.
இந்த படத்தை வெற்றிப்படமாக்க பலவழிகளில் முயன்றுவருகின்றனர். அதில் ஹிந்தி மொழி பற்றிய வசனத்தை ஒரேநேரத்தில் அனைத்து இடதுசாரி ஹேண்டிலும் பதிவிட்டுவருகின்றன. அப்போதாவது ஹெச்.ராஜா ஏதாவது விமர்சிப்பார் என வழிமேல்விழி வைத்து காத்திருக்கின்றனர்.
ஆனால் யாரும் விமர்சிக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இதனிடையே பல திரைப்பட விமர்சகர்கள் அரபிகுத்தை அங்குலம் அங்குலமாக குத்திக்கிழித்து வருகின்றனர். பலர் தங்கள் ஏமாற்றத்தை பதிவிட்டு வருகின்றனர்.
…..உங்கள் பீமா
Updated : தற்போது இணையத்தில் beastdisaster என ட்ரெண்டாகி வருகிறது.