Tuesday, June 17, 2025
Home > அரசியல் > தனித்து போட்டி..! களநிலவரம் கைகொடுக்குமா பாஜகவுக்கு..! சர்வே ரிப்போர்ட்

தனித்து போட்டி..! களநிலவரம் கைகொடுக்குமா பாஜகவுக்கு..! சர்வே ரிப்போர்ட்

01-02-2022/12.50pm

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 22ம் தேதி ஒரே கட்டமாக நடக்க இருக்கும் நிலையில் தொகுதி பங்கீடு வேட்பாளர்கள் அறிவிப்பு என தமிழக அரசியல் களைகட்ட தொடங்கியிருக்கிறது.

மக்கள் நீதிமய்யம் நாம்தமிழர் போன்ற சிறுகட்சிகள் மற்றும் பாமக போன்ற அரசியல் கட்சிகள் தனித்து களம் காணும் நிலையில் அதிமுகவிடமிருந்து விலகி தனித்து களம் இறங்குகிறது பாஜக. இந்த அதிரடி முடிவு பிஜேபி தொண்டர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டாலும் கள நிலவரம் வேட்பாளரின் பரிச்சயத்தை பொறுத்தே அமைந்திருக்கும் என கருதப்படுகிறது.

திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள் இப்போதே மக்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிவருவதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் பிஜேபியின் இந்த அதிரடிமுடிவு கைகொடுக்குமா என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துரைக்கும் என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று பிஜேபி தலைவர் அண்ணாமலை முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். 353 மாநகராட்சி வேட்பாளர்கள் 129 நகராட்சி வேட்பாளர்கள் மற்றும் 119 டவுன் பஞ்சாயத்து வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியிட்டார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சி 138 நகராட்சி மற்றும் 490 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கடந்த 2011ல் பிஜேபி தனித்து தேர்தலை சந்தித்துள்ளது நினைவு கூரத்தக்கது. அந்த தேர்தலில் நகராட்சி தலைவராக 2, பேரூராட்சி தலைவராக 13, மாநகராட்சி கவுன்சிலர் 4, நகராட்சி கவுன்சிலராக 37, பேரூராட்சி வார்டு மெம்பராக 181 பேர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

`

இந்த 2022 தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் 3 முதல் 5 சதவிகித வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறக்ப்படுகிறது. மேலும் சென்னையை பொறுத்த வரையில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கலாம் வெற்றிவாய்ப்பு 5 சதவிகிதம் என தெரியவந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் மிக குறைந்த அளவிலேயே சீட்டுக்களை பெற வாய்ப்பிருக்கிறது என கணிக்கப்பட்டிருந்த போதிலும் சமீபகால திமுகவின் நடவடிக்கைகள் பிஜேபிக்கு சாதகமாக அமையும் என தெரிகிறது.

கடலூர் பண்ருட்டி பகுதிகளில் சில இடங்களில் மட்டும் பிஜேபிக்கான வெற்றிவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரத்தில் திருப்பூர் தொகுதியில் வெற்றிவாய்ப்பு இழுபறிநிலவும், மிக குறைந்த அளவிலான மட்டுமே பிஜேபி கைப்பற்றும் என கூறப்படுகிறது. கோயம்புத்தூர் மாநகராட்சியை பொறுத்தவரையில் பிஜேபிக்கான வாய்ப்பு அதிமுகவுக்கு நிகராக இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

```
```

கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதிகளில் 8 சதவிகித இடங்களை பெற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படும் நிலையில் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பிஜேபிக்கான வெற்றி வாய்ப்புகள் குறைவு என கருதப்படுகிறது. சேலம் தொகுதியில் 4 சதவிகிதம் வெற்றிவாய்ப்பு என பாஜக தொண்டர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கின்றனர். மொத்தமுள்ள 12838 சீட்டுகளில் பிஜேபி 600 இடங்களை பெற வாய்ப்பிருப்பதாக பொதுமக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

ஆனால் நகராட்சி தலைவர் 5, பேரூராட்சி 23, மாநகராட்சி கவுன்சிலர் 7 நகராட்சி கவுன்சிலர் 40, பேரூராட்சி வார்டு 250 என 325 இடங்களில் பிஜேபி வெற்றி பெறும் என புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகிகள் களத்தில் இறங்கி நேரடியாக மக்களை இதுவரை சந்தித்திருந்தாலோ அல்லது மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்றிருந்தாலோ வெற்றி வாய்ப்பு அதிகம் எனவும், மத்திய அரசின் நலத்திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளை மக்களிடம் பேசவைக்க எதுவும் நிர்வாகிகள் தரப்பில் முயற்சியெடுத்தால் 12000 திற்க்கும்மேற்பட்ட சீட்டுகளுக்கான இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோராயமாக 2000 சீட்டுகளை வெல்லலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

……உங்கள் பீமா