Saturday, October 5, 2024
Home > செய்திகள் > அன்று ஜின்னா டவரில் கொடியேற்ற அனுமதி மறுப்பு..! இன்று ஹிந்து வாஹினி செய்த வேலை..!

அன்று ஜின்னா டவரில் கொடியேற்ற அனுமதி மறுப்பு..! இன்று ஹிந்து வாஹினி செய்த வேலை..!

1-2-22/17.00pm

குண்டூர் : ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் அமைந்துள்ளது ஜின்னா டவர். மஹாத்மா காந்தியும் பாகிஸ்தானின் தந்தை தோழர் முகம்மது அலி ஜின்னாவும் சுதந்திரத்திற்கு முன்னர் காங்கிரஸ் நடத்திய கூட்டத்திற்கு குண்டூருக்கு வந்ததாக நம்பப்படுகிறது.

பாகிஸ்தானின் தந்தையான ஜின்னாவின் நினைவை குறிக்கும் பொருட்டு கோபுரம் ஒன்று எழுப்பப்பட்டு அதற்க்கு ஜின்னா டவர் என தோழரின் நினைவாக பெயர் சூட்டப்பட்டது. கடந்த 26 ஜனவரி அன்று குடியரசுதினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்ற இந்த ஜின்னா கோபுரத்திற்கு சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் காவல்துறை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அனைவரையும் கைதுசெய்தது.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை உண்டுபண்ணியது. கைதுசெய்யப்பட்ட அனைவரும் இந்து வாஹினி என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. அதையடுத்து ஆந்திராவில் இந்து அமைப்புகள் ஒன்று கூடின. அடுத்தடுத்து தொடர்போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தில் பிஜேபியும் கலந்துகொள்ள விவகாரம் தமிழக அரியலூர் மாணவி வழக்கு போல சூடுபிடித்தது.

`

அடுத்தடுத்த இந்து அமைப்பினரின் போராட்டங்களை அடுத்து வழிக்கு வந்த மாநில ஜெகன்மோகன் ரெட்டி அரசு குண்டூர் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதையடுத்து தற்போது அந்த தோழர் ஜின்னா டவருக்கு மூவர்ணம் பூசப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் மூவர்ணத்துடனேயே தோழர் ஜின்னா டவர் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

```
```

இதுகுறித்து பேசிய பிஜேபியினர் ” அந்த கோபுரத்திற்கு மூவர்ணம் மட்டும் போதாது. அந்த கோபுரத்திற்கு தலித் கவிஞர் குர்ரம் ஜாஷுவா அல்லது அப்துல் கலாம் பெயர் சூட்டும்வரை எங்கள் போராட்டம் தொடரும்” என தெரிவித்துள்ளனர்.

….உங்கள் பீமா