2-2-22/10.15AM
சென்னை : இந்திய திருநாட்டில் யாரும் யாரையும் விமர்சிக்கலாம். ஆனால் விமர்சிப்பது திராவிட சிந்தனை கொண்டவர்களாகவும் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களாகவும் மட்டுமே இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. வலதுசாரி சிந்தனையாளர்களின் கருத்து அம்பலத்தில் ஏறுவதில்லை. கருத்து சுதந்திரம் என்பது இடதுசாரிகளுக்கு மட்டுமே.
இவர்கள் நீதிமன்றத்தை நீதிவான்களை தலைவணங்கவேண்டிய தீர்ப்பை கூட விமர்சிக்கலாம். சமீப நாட்களாக இடதுசாரி மற்றும் திராவிட சிந்தனையாளர்களால் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுபவர் மாண்புமிகு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
ஆனால் திராவிடம் பேசும் திமுக மற்றும் இடதுசாரிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட நீதிபதிகள் ஏராளம்.
அப்படி ஒருவர் தான் மறைந்த மாண்புமிகு நீதிபதி ரத்தினவேல் பாண்டியன். டிசம்பர் 14, 1988 முதல் 1994 12மார்ச் வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் இந்த ரத்தினவேல். இவர் முன்னாள் திமுக திருநெல்வேலி மாவட்ட செயலாளர் என்பது கூடுதல் தகவல். 1962 அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராகவும் 1971 சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராகவும் களம் கண்டவர்.
இவரின் தொடர் தோல்விகளை அடுத்து 1971 திமுக ஆட்சியில் கருணாநிதி அவர்களால் ஸ்டேட் பப்ளிக் ப்ராஸிக்யூட்டராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்டார்.
அதன் பின்னர் 1974 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அதையடுத்து பின்னர் சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக பதவிஉயர்வு கொடுக்கப்பட்டார்.
அதன்பின்னரே1988ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்படி திமுக பொறுப்பாளராக இருந்த ஒருவர் உச்சநீதிமன்றம் சென்ற வரலாற்றை தமிழக ஊடகங்கள் மக்களுக்கு எடுத்துச்சொல்லுமா என நெட்டிசடன் ஒருவர் ஆதாரங்களுடன் பதிவிட்டுள்ளார்.
…..உங்கள் பீமா