23-11-21/13.29pm
தென்காசி : தென்காசியில் கலெக்டர் முன்பு விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. திமுக எம்பி தனுஷ் மீது குற்றச்சாட்டை அடுக்கினர் விவசாயி குடும்பத்தினர்.
தென்காசியில் விவசாயி ஒருவரின் நிலத்தை திமுக எம்பியான தனுஷ் குமார் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலமுறை தனுஷ்குமாரை சந்தித்து முறையிட்டும் பலனில்லாமல் போனது. இதனால் மனமுடைந்த விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.
நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற அந்த விவசாயி கலெக்டர் வரும் வேளையில் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்த காவலர்கள் அந்த விவசாயி தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து அந்த பகுதியே பரபரப்பானது.
நிலத்தை பறிகொடுத்த விவசாயி பொதுப்பணித்துறையில் பணிபுரிந்ததாக சொல்லப்படுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட நில விவகாரத்தை காரணம் காட்டி திமுக தன்னை பணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் அவர் குற்றசாட்டை முன்வைத்தார். கட்டுமானப்பொருட்களின் விலை உயர்வும் திமுகவினர் நில அபகரிப்பும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்குமோ என தென்காசி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
….உங்கள் பீமா