Tuesday, October 15, 2024
Home > செய்திகள் > மதம் மாறினால் சலுகை ரத்து..! கொளுத்திப்போட்ட பிஜேபி எம்பி

மதம் மாறினால் சலுகை ரத்து..! கொளுத்திப்போட்ட பிஜேபி எம்பி

bjp flag
2-5-22/13.10PM

மத்தியபிரதேசம் : மத்தியபிரதேசம் மட்டுமல்ல இந்தியாவின் பலமாநிலங்களில் மதமாற்றம் அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே பெரும்பாலும் மதம் மாறுபவர்கள் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட அடையாளங்களை மாற்றாமல் தொடர்ந்து சலுகைகளை பெற்றுவருவதாகவும் அடையாளங்களை மாற்றியபின்னரும் சலுகைகளால் பயனடைவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

bjp flag

மேலும் உண்மையாக கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்காமல் பெரும்பான்மை மக்கள் கல்வி மற்றும் இதர ஒதுக்கீடுகளில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நடுநிலையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மத்தியபிரதேசம் ரத்தலாம் ஜபுவா தொகுதி மக்களவை பிஜேபி எம்பியாக இருப்பவர் டாமோர். இவர் இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு பேரணி மாநிலம் முழுவதும் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து குமன் சிங் டாமோர் “மத்திய பிரதேசத்தில் மதம் மாறிய பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவருக்குப் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவருக்கான இடஒதுக்கீடு வழங்கக் கூடாது. கடந்த சிலநாட்களாகப் பட்டியல் நீக்கம் குறித்து பேரணி நடத்தப்பட்டது.

`

ஆனால் மற்ற மதங்களுக்கு மாறியவர்கள் பற்றி அமைதிகாக்கிறது. அரசியலமைப்பின் 341ஆவது பிரிவு மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளது. பட்டியல்சாதியினர் மதம் மாறினால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். மாநிலத்தின் 32 மாவட்டங்கள் உட்டோட பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பட்டியல் நீக்கம் குறித்த பேரணிகளை நடத்த உள்ளோம்.

எங்களின் கோரிக்கை என்னவெனில் வேறு மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவரின் சலுகைகள் பறிக்கப்படவேண்டும் அரசுப்பணிகள் மற்றும் கல்விசேர்க்கைகளில் இடஒதுக்கீட்டுப்பலன்கள் பறிக்கப்படவேண்டும். மதமாற்றத்திற்கு பிறகும் இடஒதுக்கீடு பலன்களை அனுபவிக்கும் அத்தகையவர்களை பட்டியலினத்திலிருந்து நீக்குவது குறித்த பொதுவிழிப்புணர்வை ஏற்படுத்த அலிராஜ்புர் ரத்தலாம் மற்றும் ஜாபுவா பகுதிகளில் பேரணி நடத்தியுள்ளேன்.

```
```

1970களிலேயே இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாடாளுமன்றத்தில் இதற்குரிய சட்டங்கள் இயற்றும்வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கமாகும்” என கூறியுள்ளார். பொதுசிவில் சட்டம் பற்றி சிலநாட்களாக அரசியல்தலைவர்கள் பேசிவரும் வேளையில் இந்த பட்டியல் நீக்கம் பற்றிய பிஜேபி எம்பியின் பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

…..உங்கள் பீமா