Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > கம்யூனிஸ்டுகளுக்கு ஜெர்க் கொடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்..!

கம்யூனிஸ்டுகளுக்கு ஜெர்க் கொடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்..!

27-3-22/8.52AM

புதுதில்லி : பிஜேபி தலைவர்களான அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் ஷர்மா மீது எப்.ஐ.ஆர் பதிய உத்தரவிட டெல்லி ட்ரையல் நீதிமன்றத்தில் கம்யூனிச தலைவர்களால் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது.

கடந்த 2020ல் போராட்டக்காரர்களால் ஷாகீன்பாத்தில் கலவரம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் டெல்லியில் வன்முறையாக மாற்றப்பட்டது. 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அப்போது பிஜேபியினரால் நடத்தப்பட்ட பேரணியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய தாகூர் துரோகிகளை சுடுங்கள் என கூறினார். கூட்டத்தினர் கோலி மாரோ சலோன் கோ என பதிலளித்தனர்.

`

பர்வேஷ் பேசுகையில் “ஷாஹன் பாக்கில் கூடியிருக்கும் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் நமது வீடுகளுக்குள் புகுந்து சகோதரிகள் மற்றும் மகள்களை கற்பழிப்பார்கள்” என கூறியிருந்தார்.

இதையடுத்து பிருந்தா காரத் மற்றும் திவாரி ஆகியோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில் “இஸ்லாமியர்களை ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரித்து அவர்களுக்கு எதிரான பகைமை உணர்வை வளர்க்கும் விதத்தில் பேசிய இருவர் மீதும் எப்.ஐ.ஆர் பதிய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.

```
```

இந்த மனுவை டெல்லி ட்ரையல் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் கம்யூனிஸ்டுகள். இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரதாரியிடம் விசாரணைக்கு வந்தது. அதன் மீதான விவாதத்தில் ” தேர்தல் நேரத்தில் பேசப்படும் வார்த்தைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி எடுத்தால் 1000 பேருக்கு மேலான அரசியல்வாதிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டிய நிலவிவரும்.

எந்த ஒரு கருத்தையும் ஆவேசமில்லாமல் புன்னகையுடன் கூறினால் அது குற்றம் ஆகாது. அவர்கள் என குறிப்பிட்டிருப்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் வன்மத்துடன் கூறியது ஆகாது. அந்த போராட்டத்துக்கு பல சமுதாய மக்களும் ஆதரவு தந்திருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெரும் எண்ணம் அல்லது பொதுமக்களை குற்றம்செய்ய தூண்டுதல் இரண்டுமே வேறு வேறு விஷயங்கள்” என கூறி பிருந்தா காரத் மனுவின் மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

….உங்கள் பீமா