Friday, September 22, 2023
Home > செய்திகள் > ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலையில் முக்கியமான சாட்சி மர்மமான முறையில் விபத்தில் சிக்கி உயிரிழப்பு..!

ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலையில் முக்கியமான சாட்சி மர்மமான முறையில் விபத்தில் சிக்கி உயிரிழப்பு..!

17-11-21/ 11.10AM

கேரளா : கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குத்தி படுகொலை செய்யப்பட ஆர்எஸ்எஸ் தொண்டரின் கொலையில் முக்கியமான சாட்சியாய் இருந்தவர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.

கேரளமாநிலம் பாலக்காடு மாவட்டம் மாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சித் வயது 27. கடந்த திங்களன்று காலை 9 மணிக்கு தனது மனைவியுடன் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம மார்க்க கும்பல் அவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. மனைவியுடன் கீழே விழுந்த அவர் சித்தரிக்கும் முன் அவரை அந்த மர்ம கும்பல் சுற்றி வளைத்தது.

`

சஞ்சித் மனைவியை அடித்து தள்ளிவிட்டு சஞ்சித்தை 50 முறை கத்தியால் குத்தினர். மேலும் அவரது காலை வெட்டி அவரது மனைவி மீது வீசிவிட்டு நிதானமாக சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலையில் PFI மற்றும் SDPI இரண்டு இஸ்லாமிய அமைப்புக்கும் தொடர்பிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த கொலையை சம்பவ இடத்தில் இருந்த ஒரு முதியவர் பார்த்திருக்கிறார். அவரை போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் வழக்கின் முக்கிய சாட்சியான அவர் நேற்று மாலை அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி உயிரிழந்து விட்டதாக தெரிகிறது. இதன் பின்னணியில் மர்ம மார்க்க கும்பல் இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.

…..உங்கள் பீமா