Saturday, July 27, 2024
Home > செய்திகள் > காட்டுமிராண்டித்தனமான இந்து மதம்..? ராபின்சன் மீது பாயுமா குண்டர் சட்டம்..?

காட்டுமிராண்டித்தனமான இந்து மதம்..? ராபின்சன் மீது பாயுமா குண்டர் சட்டம்..?

25-12-21/17.22pm

சென்னை : தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கிறிஸ்துவர்களின் பண்டிகையான கிறுஸ்துமஸை முன்னிட்டு இன்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில் “கருணையின் வடிவான இயேசு பிரான் பிறந்த நன்னாளை ஈகையும் அன்பும் பொங்க, சகோதரத்துவத்துடன் கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் சமம் என்ற சமத்துவக் கொள்கை மிளிர்ந்து அன்பு தழைக்கட்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

`

இதை விமர்சித்த பிஜேபி தமிழக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி “தங்களின் கிருஸ்துமஸ் வாழ்த்துகளுக்கு நன்றி. தி மு க தலைவராக நீங்கள் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறவில்லையெனில் கவலையில்லை.ஆனால் முதல்வராக,ஹிந்துக்களுக்கு வாழ்த்து கூறாதிருப்பது அனைவரும் சமம் என்ற சமத்துகொள்கையை எப்படி மிளிர செய்யும். இதை தான் மதவாதம்,ஹிந்து விரோதம் என்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

```
```

ஒரு பிரஜையாக கட்சியின் தலைவராக ஒரு சாதாரண குடிமகனாக நாராயணன் திருப்பதி எழுப்பிய கேள்வியில் புகுந்த ராபின்சன் எனும் நபர் “இந்து மதம் என்று எதுவும் இல்லை என்பதாலும், மனிதனை சாதி ரீதியாக பிரிக்கும் கொள்கை கோட்பாடு கொண்ட காட்டுமிராண்டித்தனமான இந்து மதத்துக்கு எந்த மரியாதையும் கிடையாது” என இந்தியாவின் பெரும்பான்மை சமுதாயத்தை கொச்சைப்படுத்தியுள்ளார். இவர் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

….உங்கள் பீமா