Friday, September 22, 2023
Home > செய்திகள் > சாணக்யா சேனலுக்கு ஏற்பட்ட விபரீதம்..!! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையை புகழ்ந்தால் ஏற்பட்ட எதிர்வினையா..??

சாணக்யா சேனலுக்கு ஏற்பட்ட விபரீதம்..!! தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையை புகழ்ந்தால் ஏற்பட்ட எதிர்வினையா..??

16-11-21/12.35pm

சென்னை : தமிழக தலைவர் அண்ணாமலை அவர்களை நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் ஏகபோகமாக புகழ்ந்தால் சாணக்யா எனும் அவரது யூட்யூப் சேனல் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது.

நேற்று பாரத பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த கட்டுரைப்போட்டி ரங்கராஜ் பாண்டே அவர்களால் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 11000 பேருக்கும் மேலான மாணவ மாணவியர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டே அண்ணாமலை அவர்கள் குறித்து பேசுகையில் ” தேன்கூடு என தெரிந்தே கைவைக்கிறார். அதை எப்படி சமாளிக்க வேண்டும் என அண்ணாமலைக்கு நன்றாக தெரியும். இத்தனை வருடங்களில் சன்டிவி கலைஞர் டிவி நிருபர்களையும் நிறுவனத்தையும் யாரும் நேரடியாக குறிப்பிட்டு பேசியதில்லை.

`

ஆனால் அண்ணாமலை மிக துணிச்சலாக பேசியிருக்கிறார்” என பாராட்டி தள்ளிவிட்டார். அதற்கான எதிர்வினை கொஞ்சம் தாமதமாகவே ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு கிடைத்தது என சொல்லப்படுகிறது. நடுநிலை செய்தியாளரான ரங்கராஜ் பாண்டே நடத்தி வரும் சாணக்கியா எனும் யூ டியூப் சேனல் மர்ம நபர்களால் இன்று காலை ஹேக் செய்யப்பட்டுள்ளது.

பாரதபிரதமர் பற்றியும் அண்ணாமலை அவர்களை பற்றியும் பேசியதால் வந்த வினை என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது குறித்து ரங்கராஜ் பாண்டே தனது ட்விட்டரில் ” முகநூல் மற்றும் ட்விட்டர் கணக்கு வழக்கம்போல செயல்பட்டு வருகிறது. ஆனால் சாணக்யா சேனலை யாரோ ஹேக் செய்து விட்டார்கள். முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

….உங்கள் பீமா