Friday, April 19, 2024
Home > செய்திகள் > ஊடக தினமான இன்று வதந்தி பரப்பிய ஊடகங்கள்..! ஹர்திக் பாண்டியா கொடுத்த சம்மட்டி அடி..!

ஊடக தினமான இன்று வதந்தி பரப்பிய ஊடகங்கள்..! ஹர்திக் பாண்டியா கொடுத்த சம்மட்டி அடி..!

16-11-21/ 10.30am

மும்பை : ஊடக தினமான இன்று பல்வேறு தேசிய ஊடகங்கள் மற்றும் பிராந்திய ஊடகங்கள் மற்றும் அதன் நிருபர்கள் தங்கள் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் பத்திரிக்கைகள் இன்று ஹார்திக் பாண்டியா விவகாரத்தில் மீண்டும் வதந்தியை பரப்பியுள்ளன.

துபாயில் நடந்த T20 உலகக்கோப்பையில் கலந்து கொண்டு நேற்று மும்பை திரும்பிய இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா மும்பை விமான நிலையத்தில் சுங்கவரி அதிகாரிகளால் மடக்கப்பட்டதாகவும் அவர் வைத்திருந்த ஐந்து கோடி பெருமானமுள்ள இரண்டு கைக்கடிகாரங்களை கைப்பற்றியதாகவும் சன் டிவி TOI உட்பட பல தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இது குறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஹர்திக் பாண்டியா ” நவம்பர் 15 துபாயிலிருந்து நான் மும்பை திரும்பினேன். விமான நிலையத்தில் நானே நேரடியாக சுங்க அதிகாரிகளிடம் எனது லக்கேஜ்களை ஒப்படைத்தேன். அதில் இருந்த சில பொருட்களுக்கான பில்லை துபாயில் நான் தங்கியிருந்த அறையில் விட்டுவிட்டுட்டு வந்ததையும் கூறினேன்.

`

எனது இரண்டு கைக்கடிகாரங்களின் விலை ஐந்து கோடி என ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. அதன் மதிப்பு ஒண்ணரை கோடியாகும். நான் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் ஒரு சாதாரண குடிமகன். என் மீது சுமத்தப்படும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது” என விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் ஹார்திக்.

….உங்கள் பீமா

```
```

image credit ; toi