Saturday, May 4, 2024
Home > அரசியல் > ஒத்த ஓட்டு பாஜகவா..? ஓட்டே வாங்காம ஜெயிச்சிருக்கோம்..! தெறிக்கவிட்ட வேட்பாளர்..!

ஒத்த ஓட்டு பாஜகவா..? ஓட்டே வாங்காம ஜெயிச்சிருக்கோம்..! தெறிக்கவிட்ட வேட்பாளர்..!

14-2-22/12.20pm

சென்னை : தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 பிப்ரவரி அன்று தொடங்க உள்ள நிலையில் திமுகவும் பாஜகவும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. பிஜேபி தரப்பில் 12000திற்கும் மேற்பட்ட சீட்டுகளில் 6000த்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே போட்டியின்றி மூன்று வேட்பாளர்கள் தேர்வாகிவிட்ட நிலையில் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையின் தெருமுனைப்பிரச்சாரம் மேலும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை நகர்ப்புற 92ஆவது வார்டு பிஜேபி வேட்பாளரான கலைதேவி யூட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.

“யாரு சொன்னாங்க பிஜேபிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று. என்னுடன் களத்திற்கு வாருங்கள். நான் காண்பிக்கிறேன் மக்களிடையே பிஜேபிக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பிஜேபி வளராது என்ற மாயையை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். மக்கள் எங்களுக்கு அமோக வரவேற்பு கொடுக்கிறார்கள்.

`

27486 வாக்குகள் கொண்ட மிக கடினமான வார்டில் என்னை நிறுத்தியிருக்கிறார்கள். திராவிடக்கட்சிகளுக்கு எதிராக நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறேன். நான் திராவிட கட்சிகளிடம் சீட்டு வாங்கமுடியுமா . இதுவே பிஜேபிக்கும் மற்ற கட்சிகளுக்கும் வித்தியாசம். சாதாரண தொண்டன் கூட மேலே வரலாம். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை செய்து முடித்திருக்கிறேன்.

பூங்காக்களை சுத்தம் செய்து கொடுத்திருக்கிறேன். விளக்குகள் அமைத்துக்கொடுத்திருக்கிறேன். தொற்று காலங்களில் நிவாரண உதவி கொடுத்திருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் உடன் வாருங்கள் மக்கள் சொல்வார்கள்” என கூறினார். மேலும் திமுக அதிமுகவுக்கு மாற்றாக உங்களை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறீர்களா என நிருபர் கேள்வியெழுப்ப,

```
```

“ஏற்கனவே நான்கு எம்.எல்.ஏக்களை கொண்டுவந்துவிட்டோம். ஒத்த ஓட்டு பாஜக என கூறினார்கள். நாங்கள் ஒரு ஓட்டு கூட வாங்காமல் கமுதியில் ஜெயித்துவிட்டோமே. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் பிஜேபியை நினைக்கிறார்கள்” என தெளிவாக நிதானமாக எந்த ஒரு துண்டுசீட்டும் இல்லாமல் இளம் பெண் வேட்பாளர் ஒருவர் இப்படி பேசியிருப்பது பிஜேபி தொண்டர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

…..உங்கள் பீமா