14-2-22/10.40am
சென்னை : தேசிய கட்சி என தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கும் காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் கோரஸாக முன்வைக்கும் குற்றசாட்டு பிஜேபி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி. ஆனால் ஒவ்வொரு பிராந்திய முதல்வரும் அம்பானி மற்றும் அதானி ஜிண்டால் உள்ளிட்ட நிறுவனங்களை தங்கள் பிராந்தியத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுப்பது காலத்தின் விசித்திரம்.

சமீபத்தில் தமிழக பிராந்தியத்தில் தொழில் தொடங்க வருமாறு தமிழக முதல்வர் அதானி குழுமத்தை அழைத்திருந்தார். மேலும் நேரடியாக கார்ப்பரேட் கம்பெனியான டெஸ்லாவை தொழில் தொடங்க அழைத்திருந்தது தமிழக அரசு. இதனிடையே கார்ப்பரேட் கைக்கூலி என்ற ஒரே முழக்கத்தை கையிலெடுத்துக்கொண்டு பிரபல ஆங்கில செய்திநிறுவனமான டைம்ஸ் நவ் விவாதத்தில் கலந்துகொள்ள காங்கிரஸின் தமிழக சட்டமன்ற உறுப்பினரான விஜயதாரணி சென்றிருந்தார்.
நிருபர் கேள்வியெழுப்ப ஆரம்பிக்கும் முன்பே “கார்ப்பரேட் கைக்கூலி மோடி. பல்லாயிரம் கோடி கடன்களை அம்பானி அதானி குழுமங்களுக்கு தள்ளுபடி செய்துவிட்டார் மோடி” என எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தோன்றியதெயெல்லாம் பேசினார். நிருபர் உடனே ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துக்காட்டி விஜயதாரணியை கலங்கவைத்தார்.
நிருபர் “காங்கிரஸ் ஆட்சியில் தான் கார்ப்பரேட்களுக்கு 36 லட்சத்து ஐம்பதாயிரம் கோடிகள் கடனை ரத்து செய்தது. நீங்கள் குறிப்பிட்ட அதானி குழுமத்திற்கு 72000கோடிகள். அம்பானிக்கு ஒரு லட்சத்து பதின்மூன்றாயிரம் கோடிகள் என காங்கிரஸ் அரசு தான் கடன் தள்ளுபடி அறிவித்துள்ளது” என ஆதாரத்துடன் எடுத்துரைக்க விஜயதாரணி வேலேவெலத்துப் போனார்.
நிருபர் அதோடு நில்லாமல் “வராக்கடன் அதிகமானதற்கு காங்கிரஸ் தான் கரணம் என முன்னாள் ஆர்.பி.ஐ. கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்” என அதையும் எடுத்துக்கூற காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடைசிவரை வாய்திறக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆதாரமின்றி குற்றசாட்டை முன்வைப்பதுடன் தங்கள் ஆதரவு ஊடகங்கள் மூலம் அதை உண்மையாக்கப்பார்கின்றன என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா
