Saturday, June 15, 2024
Home > செய்திகள் > இனி free fire விடமுடியாது..! 54 சீன ஆப்களுக்கு ஆப்படித்த இந்தியா..!

இனி free fire விடமுடியாது..! 54 சீன ஆப்களுக்கு ஆப்படித்த இந்தியா..!

14-2-22/13.20pm

டெல்லி : சீனாவின் தொடர் குடைச்சலையடுத்து இந்திய அரசு சீனாவிற்கு சொந்தமான 54 ஆப்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இனி அந்த ஆப்கள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்யமுடியாது.

கடந்த வருடம் ஜூன் மாதத்தில் டிக்டாக்,வி சாட் உள்ளிட்ட 59 ஆஃப்களை தடைசெய்தது. மேலும் கடந்த செப்டம்பரில் 118 ஆப்களை தடைசெய்து உத்தரவிட்டது. மேலும் இந்த சீன ஆப்களின் மூலம் பயனாளிகளின் விவரங்கள் திருடப்படுவதாகவும் கள்ளச்சந்தையில் விவரங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது.

`

இதனிடையே பல சீன ஆப்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பாதுகாப்பு விவரங்களை திருடலாம் என இந்திய அரசு கருதியது. அதையடுத்து இன்று 54 ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்க அதிரடி உத்தரவிட்டுள்ளது. FREEFIRE, EQUALIZER AND BASSBOOSTER, FREEFIRE, BEAUTYCAMERA, VIVAVIDEO EDITOR, APPLOCK, DUALSPACE LITE, MUSICPLAYER, DUALSPACE PRO, NOTES உள்ளிட்ட 54 ஆப்கள் இன்று முதல் தடைசெய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

```
```

கடந்த இருதினங்களுக்கு முன் நடந்த க்வாட் சந்திப்பில் சீனா வரைமுறைக்கப்பாற்பட்டு நடந்ததாகவும் எல்லைப்பகுதியில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து பதில் அளிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த வருடம் நடந்த கல்வான் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இது இருக்கலாம் என கருதப்படுகிறது.

…..உங்கள் பீமா