13-4-22/10.11AM
தஞ்சாவூர் : திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் இருக்கும் பிரதமர்மோடி அவர்களின் புகைப்படத்தை ஆளும்கட்சி ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக அகற்றி வருகின்றனர்.
கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் பிரதமர் இலவச தடுப்பூசி முகாமில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்த பேனரை அகற்றக்கோரி அறந்தாங்கி பகுதியில் பிரச்சினை எழுப்பப்பட்டது. மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் மீது வழக்கும் பதியப்பட்டிருந்தது. கோயம்புத்தூர் அரசு அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டியதாக பிஜேபி பிரமுகர் கைது செய்யப்பட்டதும் நினைவு கூரத்தக்கது.

இதனிடையே தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் மதியழகன் என்பவர் தனது மனைவியும் வேப்பத்தூர் ப்ரெசிடெண்டுமான ஒரு பெண்ணை நகராட்சி அலுவலகத்தில் மாட்டியிருந்த பிரதமரின் புகைப்படத்தை அகற்ற கோரி முதுகை பிடித்து தள்ளிவிடும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
முக்கியசெய்தி : ஸ்டிக்கர் ஒட்ட தனித்துறை அமைத்து அதற்கு ஒரு அமைச்சரை நியமிக்கலாம். பாஜக தலைவர் எஸ்.ஆர் சேகர் கிண்டல்.
மேலும் அந்த மதியழகன் எனும் நபர் நகராட்சி செயலாளர் அறைக்கு சென்று அவரையும் மிரட்டி படத்தை ஏன் வைத்தீர்கள் என கேள்வியெழுப்பினார். இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதையடுத்து தகவலறிந்த தஞ்சாவூர் வடக்கு பாஜக தொண்டர்கள் மீண்டும் அதே இடத்தில் புகைப்படத்தை மாட்டியுள்ளனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து தகவலறிந்த தஞ்சாவூர் வடக்கு பாஜக தொண்டர்கள் மீண்டும் அதே இடத்தில் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
…..உங்கள் பீமா
முக்கிய செய்திகளுக்கு பின் தொடர்க.

