Friday, September 22, 2023
Home > பொழுதுபோக்கு > விசா இல்லாமல் வெளிநாடு செல்லலாமா..? இதோ சில நாடுகள்..!

விசா இல்லாமல் வெளிநாடு செல்லலாமா..? இதோ சில நாடுகள்..!

2-12-21/16.25pm

சென்னை : பாஸ்போர்ட் இருந்தும் விசா கிடைக்காமல் நீங்கள் வெளிநாடு சுற்றுலா ஏன் செல்ல முடியாது. தாராளமாக செல்லலாம்.

பாஸ்போர்ட் மட்டும் வைத்துக்கொண்டு விசா இல்லாததால் வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம். உலகில் உள்ள ஐம்பது நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வெறும் பாஸ்போர்ட் மட்டுமே போதும். அவற்றில் குறிப்பிடத்தக்க நான்கு நாடுகளை இந்த கட்டுரையில் காணலாம்.

செர்பியா; ஐரோப்பிய கண்டத்திலேயே விசா இல்லாமல் சுற்றிப்பார்க்க கூறிய ஒரே நாடு செர்பியா. இங்கு இந்திய திரைப்படங்களின் ஷூட்டிங் முக்கியமாக தமிழ்ப்படங்களின் ஷூட்டிங் அதிகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பெய்யும் பனியே இந்த நாட்டின் அழகை மெருகூட்டுகிறது. இங்கு சுற்றிப்பார்க்க மலைகள் காடுகள் மற்றும் தீவுகள் என ஏராளம் உள்ளன. வரலாற்று சிறப்பு மிக்க இடங்களும் அதிகம் உள்ளன. இங்கு சுற்றுலா செல்ல சரியான நேரம் மார்ச் முதல் மே வரை அடுத்து செப்டம்பர் முதல் அக்டோபர் வரையாகும். இங்கு சென்று வர (ரவுண்ட் ட்ரிப் ) ஒருவருக்கு 60000 முதல் 70000 வரை செலவாகும்.

`

கத்தார் ; மிடில் ஈஸ்ட் நாடுகளில் விசா இல்லாமல் செல்லக்கூடிய ஒரே இடம் கத்தார். இங்கு விசா இல்லாமல் முப்பது நாட்கள் வரை தங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு செல்ல சிறந்த காலம் நவம்பர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே. சென்னையிலிருந்தே நேரடியாக விமான சேவை உள்ளது குறிப்பிடத்தக்கது. இண்டிகோ விமானத்தில் பயண செலவு 20000 முதல் 30000 வரை ஆகும்.

பாலி : இந்தோனேசியாவில் இருக்கும் அழகான தீவு. பயண நேரம் 10 மணி நேரம் ஆகும். இங்கும் விசா இல்லாமல் முப்பது நாட்கள் தங்கலாம். இங்கும் நாம் சுற்றி கண்டுகளிக்க ஏராளமான இடங்கள் உண்டு. பயண செலவு 20000 முதல் 30000 வரை ஆகலாம். இங்கு செல்ல உகந்த காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை.

நேபாளம் : இங்கு செல்ல விசாவோ பாஸ்போர்ட்டோ எதுவும் தேவையில்லை. நம்முடைய ஓட்டுநர் உரிமம் மட்டுமே போதும். இங்கு நாம் குடும்பத்துடன் சென்று காண ஆன்மிகத்தலங்கள் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. இங்கு நாம் தொழில் தொடங்கலாம். இடங்கள் வாங்கலாம். எல்லாவற்றிற்கும் அனுமதி உண்டு. இங்கு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சுற்றிப்பார்க்க ஏதுவான காலம் என சொல்லப்படுகிறது.

…..உங்கள் பீமா