Thursday, June 20, 2024
Home > செய்திகள் > கண்ணீரை வரவழைத்த சிசிடிவி காட்சி..! கைதான லாரி ட்ரைவர் ..!

கண்ணீரை வரவழைத்த சிசிடிவி காட்சி..! கைதான லாரி ட்ரைவர் ..!

20-1-22/12.35pm

விழுப்புரம் : தமிழக மக்களின் நினைவில் சுதந்திரபோராட்ட வீரர்களின் தியாகங்கள் பெயர்கள் நினைவிருக்கிறதோ இல்லையோ பெரும்பாலான மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பவர் ஈ.வே.ராமசாமி என திராவிட கொள்கை கொண்டவர்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எங்கே சிலை அவமதிப்பு நடந்தாலும் அது ஈ.வே.ராமசாமி அவர்களின் சிலையாகத்தான் இருக்கும். சமீபகாலங்களாக ஈ.வே.ராமசாமி அவர்களின் சிலையில் காவிப்பொடி தூவுவதும் செருப்பு மாலை அணிவிப்பதும் சிலையை உடைப்பதும் வாடிக்கையாகி வருகிறது. தமிழக அரசு அந்த மர்ம நபர்களை பிடித்து குண்டாசில் போடுவதும் வாடிக்கையாகி வருகிறது.

தமிழகத்தில் கோவில்களை இடித்தும் அவமரியாதை செய்தும் புனித குளங்களை அசுத்தம் செய்தும் வரும் மர்மநபர்களை போலீசாரோ அரசோ கைதுசெய்யவோ நடவடிக்கை எடுக்கவோ தீவிரம்காட்ட மறுக்கிறது என இந்து அமைப்பினர் குற்றம்சாட்டி வரும் வேளையில் ஈ.வே.ராமசாமி அவர்களின் திருவுருவச்சிலை கனரக வாகனம் ஒன்றால் இடித்து தள்ளப்பட்டது பெரிதும் சச்சரவை உண்டுபண்ணியுள்ளது.

`

விழுப்புரம் காமராஜர் வீதியில் சாலையின் நடுவே ஈ.வே.ராமசாமி அவர்களின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆறு அடி உயரத்திலான அந்த சிலையை நான்கு ஆதி பீடம் அமைத்து சுற்றி வேலியமைத்து நாடு ரோட்டில் அமைத்திருக்கிறது அரசு. இந்நிலையில் நேற்று இரவு புனேவை சேர்ந்த வடநாட்டு லாரி ஒன்று அந்த சாலையில் சென்றது.

அங்கு திரும்ப வழியில்லாத கண்டெய்னர் லாரி ட்ரைவர் முடிந்த அளவு சாலையில் ஸ்டியரிங்கை வளைத்து திருப்பும்போது ஏற்பட்ட விபத்தில் ஈ.வே.ராமசாமி சிலை நிலைதடுமாறி கீழே விழுந்தது. அதில் சிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த சட்டமன்ற உறுப்பினர்களான புகழேந்தி மற்றும் லட்சுமணன் ஆகியோர் சிலையை பார்வையிட்டனர். மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கண்டெய்னர் ட்ரைவரை கைது செய்துள்ளனர். இந்த சிலை இடிப்புக்கு பின்னால் எதுவும் வெளிநாட்டு சதியோ அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஓட்டுனரின் பெயர் மசீந்திரா தபலி என்பதும் அவர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

```
```

கன்டெய்னரை போலீசார் பறிமுதல் செய்து ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டுசென்றுள்ளனர். பெரியாரை கைப்பற்றி விழுப்புரம் தாலுகா ஆபீஸ் கொண்டு சென்றனர். அங்கு உள்ள அறையில் ஈ.வே.ராமசாமி சிலையை வைத்து அறையை சீல் செய்துள்ளனர். திமுகவினர் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் போராட்டம் நடத்தி பரபரப்பை உண்டாக்கினர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து வழியனுப்பி வைத்தனர்.

தமிழக அரசு சிலை விஷயத்தில் மிகவும் பொறுப்புணர்வோடு செயல்படுவதாகவும் பெரியாரை அவமதித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் திமுகவினர் கருத்து கூறி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சி வெளியாகி பலரை கண்ணீர்விட வைத்துள்ளது.

….உங்கள் பீமா