Monday, March 27, 2023
Home > பொழுதுபோக்கு > டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விரித்த வலையில் மாட்டுவாரா ஸ்பைடர்மேன்..!! நட்சத்திர பட்டாளங்கள் குவிந்திருக்கும் ஸ்பைடெர்மென் நோ வே ஹோம்..!

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விரித்த வலையில் மாட்டுவாரா ஸ்பைடர்மேன்..!! நட்சத்திர பட்டாளங்கள் குவிந்திருக்கும் ஸ்பைடெர்மென் நோ வே ஹோம்..!

குழந்தைகளை கவர்வது அனிமேஷன் மற்றும் கார்ட்டூன் படங்களே என்ற எண்ணத்தை தலைகீழாக புரட்டி போட்ட சீக்வல் ஸ்பைடர்மேன் சீரிஸ். 2002 ல் மார்வெல் ஸ்டுடியோவால் திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்பைடர்மேன் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

சிறுவர்கள் ஆர்வமாகவும் பெரியவர்கள் நம்மால் இப்படி இருக்கமுடியவில்லையே என்றும் ஏக்கப்படும் அளவிற்கு உணர்வோடு உட்புகுந்த திரைப்படம் இது. மேலும் சிலந்தி பூச்சியை காணும்போதெல்லாம் நம்மையும் கடித்து நாமும் ஸ்பைடர்மேன் ஆகமாட்டோமா என நகைச்சுவையாக சிந்தித்ததாக பலர் பேட்டியளித்துள்ளனர் என்றால் இந்த திரைப்படத்தின் தாக்கம் எப்படி என்பது புரியும்.

2002 சாம் ரெய்மி இயக்கத்தில் டேவிட் கோயெப் எழுத்தில் உருவான ஸ்பைடர்மேன் ரசிக கூட்டத்தையே தியேட்டருக்கு இழுத்தது. இதன் இரண்டாவது சீரிஸாக வெளிவந்து கொண்டிருக்கும் பாகங்களும் சக்கைபோடு போடுகிறது.

`

விரைவில் திரைக்கு வரவுள்ள ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் ட்ரைலர் ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்திருக்கிறது. இந்த பாகத்தில் டாம் ஹாலந்து ஸ்பைடெர்மேன் கதாபாத்திரத்தில் முற்றிலும் வித்தியாசமாக வலம் வருகிறார். மேலும் ஜேமிபாக்ஸ் போன்ற முக்கிய நடிகர்களும் தங்கள் பலத்தை காண்பித்திருக்கின்றனர்.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று டாக்டர் ஸ்ட்ரேஞ். இந்த பாத்திரம்தான் கதையின் உயிர்நாடி என சொல்லப்படுகிறது. இந்த பாத்திரத்தில் பெனடிக்ட் கும்பர்பேட்ச் நடித்துள்ளார். இவரிடம் சிக்கி ஸ்பைடர்மேன்படும் பாடும் இவர்கள் இருவரும் சேர்ந்து எதிரிகளை துவம்சம் செய்வதும் பயங்கர CGயுடன் பின்னி பெடலெடுத்திருப்பதாக தெரிகிறது. அதற்க்கு இந்த ட்ரைலரே சாட்சி.

விரைவில் தமிழ் கன்னடா தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வருகிற டிசம்பர் 17ல் ரிலீஸாகவுள்ளது.