9-1-22/10.26am
சென்னை : இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மதச்சார்பின்மையும் இந்து துவேஷமும் சமுகத்தில் புரையோடிப்போயிருக்கிறது. இங்கு ஒரு பெரும்பானமையினரின் கடவுளை நிந்திக்கலாம் அல்லது அவர்களின் நம்பிக்கையை கேலி செய்யலாம். சட்டமோ ஆளும் அரசோ காணாமல் கடந்து போய்விடும்.

அதையே ஒரு சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை குறித்த சிறு விமர்சனம் என்றாலும் சட்டமும் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு அரணாக இருப்பதுபோல தங்களை காட்டிக்கொள்ளும். இந்த வகையில் கிறித்தவ மதத்தை சேர்ந்த சில பாதிரியார்கள் தொடர்ந்து இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி வருவதும் அவர்களின் வழிபாட்டு முறையை நிந்திப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கிறித்தவ பாதிரியாரும் ஏஞ்சல் தொலைக்காட்சி நிறுவனருமான சாது.சுந்தர் செல்வராஜ் என்பவர் பொங்கல் பண்டிகையை குறித்து பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. யார் இந்த சுந்தர் செல்வராஜ் என தேடினால் முன்னுக்குப்பின் முரணான தகவலே கிடைக்கப்பெறுகிறது. மினிஸ்ட்ரி ஆப் ஜீசஸ் எனும் அமைப்பை தொடங்கிய இவர் இந்து குடும்பத்தில் பிறந்தவர் என்றும் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்றும் குழப்பமான தகவலே கிடைக்கப்பெறுகிறது.
சிறுபான்மையினர் என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு மற்ற மதங்களை குறிப்பாக இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் இவர்களால் ஒட்டுமொத்த சமுதாயத்தின்மீதே காழ்ப்புணர்ச்சி உருவாகும் நிலை இருப்பதாக இந்து அமைப்பினர் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் செல்வராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் பொங்கல் பண்டிகையில் வழிபாட்டை மட்டும் நீக்கிவிட்டு பொங்கல் வைத்து சாப்பிடலாம். அது ஒரு அறுவடை திருநாள் பண்டிகை மட்டுமே என சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார்.
இவர் போன்ற போலியான ஆட்கள் மீது நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது போன்ற வன்மம் பரப்பும் தொலைக்காட்சிகளை தடைசெய்ய வேண்டும் எனவும் இந்து அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா