Wednesday, March 19, 2025
Home > செய்திகள் > ஜல்லிக்கட்டுக்கு நோ நோ..! ஈத்துக்கு ஓகே..! தீபாவளி பட்டாசுக்கு நோ நோ..! பாகிஸ்தான் வெற்றிக்கு ஓகே..!

ஜல்லிக்கட்டுக்கு நோ நோ..! ஈத்துக்கு ஓகே..! தீபாவளி பட்டாசுக்கு நோ நோ..! பாகிஸ்தான் வெற்றிக்கு ஓகே..!

2-11-21 / 14.55pm

தமிழகத்தில் பிரபலமான தமிழர் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு தடை விதித்தது. பல வருட போராட்டங்களுக்கு பிறகு எழுந்த மக்கள் புரட்சியை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டில் மீதான தடையை நீக்கி மத்திய மோடி அரசு நீக்கியது.

ஆனால் எந்த ஒரு அரசும் மத பண்டிகைகளுக்காக இந்துக்கள் தெய்வமாக வழிபடும் புனிதமான பசுவைக் கொல்ல தடைவிதிக்கவில்லை. இந்தியாவில் பிஜேபி ஆளு சில மாநிலங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதே போல இந்துக்களின் பண்டிகைக்கு மட்டும் விழித்துக்கொள்ளும் பீட்டா அமைப்பு மற்ற நேரங்களில் அசந்து தூங்கிவிடுகிறது.

சமீபத்தில் பீட்டா வெளியிட்ட அறிக்கையில் “திருமண சடங்குகள் எனும் பெயரில் குதிரைகள் துன்புறுத்தப்படுகின்றன” என குறிப்பிட்டிருந்தது. அதே போல இந்துக்களின் பண்டிகையான தீபாவளி அன்றும் அதற்கு 10 நாட்கள் முன்பிருந்தும் பட்டாசு வெடிப்பது 200 ஆண்டு கால வழக்கம்.

அதை சமூக ஆர்வலர்கள் சமூக போராளிகள் சுற்றி சூழல் ஆர்வலர்கள் எனும் பெயரில் தடைவிதிக்க கோரி நீதிமன்றம் சென்று வெற்றியும் அடைந்துவிட்டனர். ஆனால் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைதாகி சிறைசென்று திரும்பிய ஆர்யன் கான் வீடு திரும்பிய போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.

`

பாகிஸ்தான் இந்தியா டி20 போட்டியின்போது பாகிஸ்தான் வெற்றிபெற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அப்போதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு அது பட்டாசாக தெரியவில்லை. பட்டாசிலிருந்து வெளிவரும் மாசுவை விட தினம் தினம் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை எரிப்பதால் வரும் மாசு மிக அதிகம்.

அதைவிட இருசக்கர வாகனம் நான்குசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களால் ஏற்படும் மாசுக்கள் மிகமிக அதிகம். இதை எதிர்த்து எந்த சுற்று சூழல் ஆர்வலரும் நீதிமன்றம் ஏறமாட்டார். ஏனெனில் இங்கு குறிப்பிட்ட பெரும்பான்மை மதத்தினரின் நம்பிக்கைகளை அவமதிக்க வேண்டும் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

கிட்டத்தட்ட 10 லட்சம் குடும்பங்கள் இந்த பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனையை நம்பியே தங்கள் பசியை போக்கிக் கொள்கின்றன. வருடம் ஒருமுறை பட்டாசு வெடித்து நாம் கொண்டாடும் தீபாவளி அவர்கள் வருடம் முழுவதும் இரண்டு நேரம் வயிறார உண்ண வழிவகை செய்கிறது.

```
```

சிவகாசி பட்டாசை வாங்குவோம். தீபாவளியை சிறப்பிப்போம். அரசு அறிவித்த நெறிமுறைப்படி பட்டாசை வெடிப்போம்.

…உங்கள் பீமா

#சிவகாசி #பட்டாசுதொழிற்சாலை #ஊழியர் #crackersban #diwali

pic credit labours image : times of india