27-2-22/9.43am
சென்னை : தமிழக ஊடகங்கள் பல தவறான பொய்யான உள்நோக்கத்தோடு கூடிய செய்திகளை வெளியிடுவதும் பின்னர் அதில் சில செய்திகளை நீக்கிவருவதும் பலத்த விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.அந்த வகையில் நியூஸ் செவன் செய்தி ஊடகம் நேற்று செய்தியை நீக்கியிருக்கிறது.
புதியதலைமுறை நிருபரான நிரஞ்சன் குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ” உக்ரைனில் இருந்து இதுவரை 16 தமிழர்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர். ஐந்து பேர் டில்லிக்கும் ஐந்து பேர் மும்பைக்கும் தனித்தனி விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். இவர்களுக்கான செலவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது” என தவறான செய்தியை பகிர்ந்துள்ளார்.
மத்திய அரசு அனைவருக்குமான பயணச்செலவை ஏற்றுக்கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த பொய்யான செய்தி ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே நியூஸ் 7 தொலைக்காட்சி ” ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆதரவு அளிக்குமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியிடம் கோரிக்கை.
போரைநிறுத்த ரஷ்யாவிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் கோரிக்கை” என ரஸ்யா போரை நிறுத்த ரஷ்யாவே கேட்டுக்கொண்டதாக செய்தியை வெளியிட்டு பின்னர் நீக்கியுள்ளது. பொறுப்பையும் பொதுநலனையும் மறந்து பொறுப்பற்று செயல்பட்ட நியூஸ் செவனை நெட்டிசன்கள் தொடர்ந்து கிண்டலடித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா