17-2-22/13.50pm
அரியலூர் : நீட் தேர்வு தோல்வி பயத்தால் உயிரைமாய்த்துக் கொண்ட அனிதாவின் போராளி அண்ணன் திருமணமான பெண்ணிடம் வம்பிழுத்ததால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதாவின் மரணத்தை திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள் அதை பூதாகாரமாக்கின. செய்தி நிறுவனங்களும் தோல்வி பயத்தால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவை வைத்து தங்களது டி.ஆர்.பியை ஏத்திக்கொண்டன. திமுக ஆளும்கட்சியான பின்னும் நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிடாமல் மேலும் ரகசியமாய் வைத்துள்ளது.

இதனிடையே செந்துறை அருகே உள்ள குழுமூர் பெரியார்நகரில் வசித்துவருபவர் வசந்தி வயது 39. அனிதாவின் குடும்பத்தினரும் இதே பகுதியில் வசித்து வருகின்றனர். அனிதாவின் சகோதரர் அருண்குமார் தெருவில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஒவ்வொரு முறையும் வசந்தியிடம் வம்பிழுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பயமுறுத்தும் வகையில் வேகமாக வருவதாகவும் தெரிகிறது.
இதை தனது கணவரிடம் வசந்தி முறையிட்டுள்ளார். அதையடுத்து அருண்குமாரை கணவர் தட்டிக்கேட்க அருண்குமார் வசந்தி மற்றும் அவரது கணவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து வசந்தி கொடுத்த புகாரின்பேரில் பெண் வன்கொடுமை சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையிலடைத்தனர்.
….உங்கள் பீமா