குன்னூர் : இன்று காலை இந்திய ராணுவத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று அதிபயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மூத்த அதிகாரிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று காலை 10 முதல் 11 மணிக்குள் இந்த அசம்பாவிதம் நிகழ்நிதிருக்கலாம் என கூறப்படுகிறது. பிபின் ராவத் பயணித்த IAF MI-17V 5 ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக தெரிகிறது. இதுவரை நான்கு பேர் மீட்கப்பட்டதாகவும் அவர்களுக்கு 80% சதவிகித தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆழமான மலைப்பகுதி என்பதால் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதுவரை வந்த தகவல்களின்படி பிபின் ராவத்துடன் பயணித்த எட்டு பேரின் பெயர்கள் வெளிவந்துள்ளது. ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிடர் லெப்டினென்ட் கலோனியல் ஹர்ஜிந்தர் சிங், என்.கே.குர்சேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார் மற்றும் சாய் தேஜா, ஹாவ் ஸத்பால் ஆகியோர் பயணித்ததாக தெரிய வந்துள்ளது.



மேலும் உயிரிழப்புகள் பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் விளக்குவார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த தகவலை பகிர்ந்த அனைத்து மீடியாக்களின் பின்னூட்டத்தில் சில இஸ்லாமியர்கள் சிரிப்பதை பார்க்கையில் அவர்கள் மனிதர்களா இல்லை மிருகங்களா என எண்ணத்தோன்றுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய இந்திய எல்லைக்காவல் தெய்வங்கள் அனைவரும் பத்திரமாக திரும்ப இறைவனை பிரார்த்திப்போம். இந்த இக்கட்டான சூழலில் இந்திய ராணுவத்தின் துணை நிற்போம். வாழ்க இந்தியா. ஜெய்ஹிந்த்.

….உங்கள் பீமா