24-1-22/16.40pm
பிஹார் : பிஹார் மாநில பிஜேபியை சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் நாராயண் பிரசாத் மகன் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிஹார் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் பிஜேபியை சேர்ந்த நாராயணன் பிரசாத். இவரது மகன் பப்லு குமார். பப்லு குமார் தனது உறவினர் ஹரேந்திர பிரசாத் மற்றும் மேலாளர் விஜய் ஷா மற்றும் தனது நண்பர்களுடன் மொபுஸில் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட ஹரடியா கோரி தோலா கிராமத்திலுள்ள தனது பழத்தோட்டத்திற்கு நேற்று சென்றுள்ளார்.

அங்கு அத்துமீறி நுழைந்த சிலர் பழங்களை பறித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை தட்டிக்கேட்ட அமைச்சரின் மகன் கடுமையாக தாக்கப்பட்டார். மேலும் அவருடன் வந்தவர்களும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரின் மகன் பப்லு துப்பாக்கி பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது. அங்கு நடந்த கைகலப்பில் குழந்தைகள் கீழேவிழுந்து அடிபட்டதாக கூறப்படுகிறது.


பப்லு துப்பாக்கியால் சுட்டதாக கிராமவாசிகள் தெரிவிக்கையில் பப்லு துப்பாக்கி பயன்படுத்தவில்லை எனவும் தனது துப்பாக்கியை கும்பல் காரிலிருந்து எடுத்துசென்றுவிட்டதாகவும் கூறினார். அந்த சம்பவம் வீடியோவாக ஒருசிலரால் பதிவாக்கப்பட்டுள்ளது. வீடியோவை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். அடிபட்டதாக சொல்லப்படும் குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பப்லுவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சரின் மகன் வானத்தை பார்த்து சுட்டதாகவும் அதனால் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் கீழே விழுந்து அடிபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கிரிக்கெட் விளையாடியவர்கள் தாக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்திவருகின்றன.

….உங்கள் பீமா