Friday, March 29, 2024
Home > செய்திகள் > உருகிய வெல்லம்..! மக்கள் நீதிமய்யம் போட்ட ஒப்பந்தம்..! வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..

உருகிய வெல்லம்..! மக்கள் நீதிமய்யம் போட்ட ஒப்பந்தம்..! வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..

22-1-22/17.30pm

சென்னை : தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறிவந்தனர். எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கடும் கண்டன குரல்களை எழுப்பிவந்தனர். அப்படி எதுவும் இல்லை என உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி சாதித்துவந்த நிலையில் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என அதிரடியாக அறிவித்தார் முதல்வர் முக.ஸ்டாலின்.

மேலும் பல இடங்களில் பொங்கல் முடிந்த பின்னர் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் சில இடங்களில் இன்னும் பொங்கல் தொகுப்பு கிடைக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தரமற்ற பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கிய நிறுவனத்தில் ஒன்று மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு சொந்தமானது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து செல்வகுமார் என்பவர் தனது பதிவில் பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது “தமிழ்நாடு முழுவதும் வெல்லம் உருகி வெள்ளமாக ஓடினாலும் மக்கள் நீதி மய்யம் இது பற்றி வாய் திறக்காது. ஏன் தெரியுமா. இந்த தொகுப்பு ஆர்டரில் 1.0 கோடி தொகுப்பை கோபாலபுர அரசு தன்னுடைய B Team மநீமவிற்கு கொடுத்தது. மீதி அமைச்சர் அவராக எடுத்து கொண்ட டிப்ஸ்.

`

பொங்கல் தொகுப்பை தயாரித்து கொடுக்க கோபாலபுர அரசு தேர்ந்தெடுத்த 2 நிறுவனத்தில் ஒன்றுதான் அனிதா டெக்ஸ்கோட், (Anitha Texcot) கிட்டதட்ட 1 கோடி தொகுப்புகள் ஆர்டர் (50%) பெற்று சப்ளை செய்தது அந்த நிறுவனம். இதன் பங்குதாரர் தான் மநீம பொருளாளர் சந்திரசேகர். சந்திரசேகரின் இன்னொரு நிறுவனத்தின் Raajkamal Frontiers Private Limited கூட்டாளி யார் தெரியுமா. அவர் உலக நாயகன் கமலஹாசன்.

இந்த நிறுவனம் சரியாக தேர்தல் அறிவிப்பு வருவதற்கு ஒரு மாதம் முன்னர் தொடங்கபட்டது 19-பிப்ரவரி 2021. meகொரோனா ஒன்றாம் அலையில் தமிழக அரசுக்கு கொடுத்த PPE கிட் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டி வந்தார் அப்போதைய எதிர்கட்சி தலைவர். அதை செய்ததும் இந்த நிறுவனம்தான். அதன் அடிப்படையில்தான் வருமானவரித்துறை ரெய்டும் நடந்தது.தே நிறுவனத்திற்கு பொங்கல் தொகுப்பு தயாரித்து வழங்கும் ₹650 கோடி டென்டரை வழங்கியுள்ளது கோபாலபுர அரசு.

```
```

தரமற்ற பொருட்களை குறைவான விலையில் வெளி மாநிலத்தில் இருந்து வாங்கியது மட்டுமல்லாமல் கொடுத்த ஆர்டரில் 80% கூட சப்ளை செய்யவில்லையாம் அனிதா டெக்ஸ்கோட். அனிதா டெக்ஸ்கோட் நிறுவனத்தின் பின்புலம் தெரிந்தே ஆர்டர் கொடுத்த கோபாலபுர அரசு, அனிதா டெக்ஸ்கோட் மீது நடவடிக்கை எடுக்க வழியில்லாமல் தயாரித்த வேறு மாநில நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பதாக கூறுகிறது” என பதிவிட்டுள்ளார்.

….உங்கள் பீமா