6-11-21/ 11.50am
துபாயில் நடைபெறும் T20 உலகக்கோப்பையில் கலந்துகொள்ள இந்தியா சென்றுள்ளது. அங்கு பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்தது. அப்போதிருந்தே அணியின் வீரர்கள் மேல் அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் இந்தியா ஆப்கானிஸ்தானுடன் மோதிய போட்டியில் இந்தியா மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது. இந்திய கிரிக்கட் வாரியம் தனக்கு சாதகமாக போட்டியை நிர்ணயித்ததாகவும் ஐபிஎல் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவதால் அதை கருத்தில் கொண்டு மேச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் வதந்தியை கிளப்பிவருகின்றனர்.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் இந்துவுக்கு விட்டுக்கொடுக்க நினைத்தே பந்து வீச்சை தேர்வு செய்தது எனவும் அதன் பிறகே இந்தியாவால் 210 ரன்கள் எடுக்க முடிந்தது எனவும் மனதில் தோன்றியதையெல்லாம் மக்களிடம் செய்தியாக பரப்பிவருகின்றனர் பாகிஸ்தானியர்கள்.
பாகிஸ்தானிய பத்திரிக்கையாளாரான அர்பா பெரோஸ் “கே எல் ராகுலும் ரோஹித் சர்மாவும் ரன்கள் முறையாகவா எடுத்தார்கள். ஆப்கன் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் பந்து வீசினார்களா.
ஆப்கானிஸ்தான் கேப்டன் நபியும் இந்திய கேப்டன் விராட் கோலியும் டாஸ் போடப்பட்ட நேரத்தில் பேசிக்கொண்டார்கள். அப்போது தான் சூது நடந்திருக்க வேண்டும்.” என ஜெய் பீம் சூர்யா போல புது கதையை உருவாக்கினார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க இந்திய கிரிக்கட் வாரியத்தை தொடர்புகொண்டபோது பதில் கிடைக்கவில்லை.
……ஆய்ஷா ரகுமான்