Friday, March 24, 2023
Home > செய்திகள் > மாவோயிஸ்ட்டுகள் குண்டு வீச்சு..! இருவர் படுகாயம்..!

மாவோயிஸ்ட்டுகள் குண்டு வீச்சு..! இருவர் படுகாயம்..!

26-2-22/9.55am

பிஹார் : பிஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இவர்களை ஒடுக்க CRPF வீரர்கள் ரோந்து செல்வது வழக்கம். நேற்று வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது மாவோயிஸ்டுகள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசியதாக சொல்லப்படுகிறது.

பிஹார் மாநிலம் கயாமாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கோப்ரா கமாண்டோ 205 பட்டாலியன் வீரர்கள் நேற்று மாலை ஐந்துமணியளவில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் திடீர் துப்பாக்கிசூடு நடத்தினர். மேலும் IED எனப்படும் சக்திவாய்ந்த குண்டுகளையும் வீசினர்.

இந்த குண்டுவெடிப்பில் கமாண்டெண்ட் விபோர் குமார் சிங் என்பவரது இருகால்களும் பலத்த காயமடைந்து. மேலும் ஜவான் சுரேந்திர சிங் படுகாயமடைந்தார். கயாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த சக்ரபந்தா அடர் வனப்பகுதி மாவோயிஸ்டுகள் அதிகம் நடமாடும் பகுதி என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் காயப்பட்டவர்களை மீட்க வந்த ஹெலிகாப்டர் இருளின் காரணமாக தரையிறங்க சிரமப்பட்டதாக சொல்லப்படுகிறது.

`

காயமடைந்தவர்களை மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். துப்பாக்கிசூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் தப்பியோடிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

…..உங்கள் பீமா