Friday, June 2, 2023
Home > செய்திகள் > மதுரையில் பரபரப்பு..! அபலை பெண்ணை கற்பழித்த கான்ஸ்டபிள்..!

மதுரையில் பரபரப்பு..! அபலை பெண்ணை கற்பழித்த கான்ஸ்டபிள்..!

1-12-21/12.33pm

மதுரை : மதுரையில் இரவு திரைப்படத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்த பெண்ணை போலீஸ் கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திலகர் திடல் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் முருகன். இவர் கடந்த சனிக்கிழமை இரவு வழக்கமான சோதனையில் சக போலீஸ்காரருடன் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு பெண் ஒரு ஆண் இருவரும் இரவு இரண்டு மணியளவில் கான்ஸ்டபிள் சோதனையிட்டுக்கொண்டிருந்த வழியில் வந்திருக்கிறார்கள். இருவரையும் காவல்துறை அதிகாரி மடக்கியிருக்கிறார்.

பின்னர் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில் தாங்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் சக பணியாளர்கள் ஐந்து பேருடன் திரைப்படத்துக்கு சென்றுவிட்டு திரும்பியதாகவும் மற்ற மூவர் சென்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து கான்ஸ்டபிள் முருகன் உடனிருந்த அதிகாரியிடம் பேசியிருக்கிறார்.

`

அந்த பெண்ணின் பாதுகாப்பு கருதி தானே வீட்டில் கொண்டு பத்திரமாக விடுவதாய் கூறியிருக்கிறார். இதனால் அந்த அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணை முருகனுடன் அனுப்பிவைத்திருக்கிறார். அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு போன கான்ஸ்டபிள் முருகன் நேராக அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்லாமல் ஒரு லாட்ஜிற்கு அழைத்து சென்று அந்த பெண்ணின் விருப்பமில்லாமல் கதற கதற கற்பழித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

சமப்வத்தை நிறைவேற்றிய பின் அதே ஆட்டோவில் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டிற்கு கொண்டுபோய் விட்டதாக தெரிகிறது. மறுநாள் ஒன்றுமே நடக்காதது போல கான்ஸ்டபிள் முருகன் சக அதிகாரியுடன் பணிக்கு திரும்பியிருக்கிறார். அதன்பின்னனர் திங்கட்கிழமை காலை பாதிக்கப்பட்ட பெண் சக ஊழியரிடம் சொல்ல அடுத்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் கான்ஸ்டபிள் முருகன் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என உறுதியளித்தார். மேலும் காவல்துறை கூடுதல் இயக்குனரான தாமரைக்கண்ணன் கான்ஸ்டபிள் மீது இந்திய தண்டனை சட்டம் 376ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

….உங்கள் பீமா