Saturday, October 5, 2024
Home > செய்திகள் > மதம் மாறி திருமணம்..! தலையணையில் உயிரை தொலைத்த ஷிவ விஸ்வகர்மா..?

மதம் மாறி திருமணம்..! தலையணையில் உயிரை தொலைத்த ஷிவ விஸ்வகர்மா..?

21-01-22/14.20pm

உத்திரபிரதேசம் : காதலுக்காக மதம் மாறி கைப்பிடித்த கணவனால் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

உத்திரபிரதேசம் கான்ஷிராம் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு வசித்துவந்த யாசீன் என்பவரை ஷிவ விஸ்வகர்மா என்பவர் காதலித்துவந்தார். யாசீன் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாஸீனை கரம்பிடிக்க மதம் மாறி சாரா என பெயர் மாற்றிக்கொண்டார். ஆறுவருடங்களுக்கு மேலான திருமண உறவில் விரிசல் விழுந்தது.

கான்ஷிராம் குடியிருப்பும் பகுதி நான்பாரா நகரில் வசித்துவந்த அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யாசீன் தனது மனைவி சாராவை படுக்கையறையில் தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி கொன்றதாக கூறப்படுகிறது. அந்த அறையில் மூன்று வயது மகளும் இருந்திருக்கிறாள். சாராவை கொன்ற யாசீன் வீட்டிற்கு வெளியே குழந்தையை விட்டுவிட்டு தப்பியோடியிருக்கிறான்.

`

இறந்தவரின் சகோதரர் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது யாரும் எடுக்காததால் சந்தேகமுற்று சாராவின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அங்கே சாரா சடலமாக கிடந்ததை கண்ட சகோதரர் போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்பின்னர் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் அந்த பகுதி மக்கள் கூறுகையில் யாஸீனின் முதல்மனைவி சாய்ராபானு கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சுற்றித்திரிந்ததாக தெரிவித்துள்ளனர்.

```
```

அதனால் முதல்மனைவியான சாய்ராபானுவை போலீசார் விசாரித்து வருகின்றனர். சாய்ராவை எட்டுவருடங்களுக்கு முன்னரே திருமணம் செய்ததாகவும் அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் இவ்வளவு நாள் வெளிநாட்டில் வேலைபார்த்ததாகவும் போலீசாரிடம் சாய்ரா கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

…..உங்கள் பீமா