Thursday, May 21, 2026
Home > செய்திகள் > பலே ஊழல்..?! வசமாய் சிக்கிய பெரியார் பல்கலைக்கழகம்..?

பலே ஊழல்..?! வசமாய் சிக்கிய பெரியார் பல்கலைக்கழகம்..?

சேலம் : பெரியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பட்டப்படிப்புகள் செல்லாது என மத்திய அரசின் யுஜிசி அறிவித்துள்ளது மாணவர்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. திடிரென வந்த இந்த அறிவிப்பு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.



பல்கலைக்கழக மானியகுழுவான யுஜிசி தமிழகத்தில் மாணவர்களுக்கு தொலைதூர படிப்புகளை வழங்க நான்கு பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களிலும் அனுமதிபெறாத படிப்புகளையும் பயிலும் மாணவ மாணவியருக்கு எந்த ஒரு சலுகையும் வழங்கப்பட மாட்டாது என அதில் குறிப்பிட்டிருந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருபதிற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் தாயாரின் கட்டுப்பாட்டில் 27 நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வியை மாணவர்களுக்கு வழங்கிவருகின்றன.

இந்நிலையில் சேலம் மாவட்டம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 1997ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் 2001ல் 96பாடப்பிரிவுகளுடன் தொலைதூரக்கல்வி திட்டம் தொடங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 156 பாடத்திட்டங்கள் மற்றும் தொழில்சார் பாடப்பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன. ஆரம்பத்தில் 210 மையங்கள் தமிழகத்தில் ஏறப்டுத்தப்பட்டு மாணவர்சேர்க்கை நடைபெற்றது

.



அதன்பின்னர் படிப்படியாக பிரமாநிலங்களில் 70 மையங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஆறு மையங்கள் என திறக்கப்பட்டது. இந்த முந்நூற்றிற்கும் மேற்ப்பட்ட மையங்களில் 50000 மாணவர்கள் பயின்று வருவதாக பெரியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழகம் அனுமதிபெறாமல் வெளிமாநிலங்களில் பல மையங்களை திறந்திருப்பதாக குற்றசாட்டு எழுந்தது. அதனால் 2014-15ல் மாணவர் சேர்க்கைக்கு யுஜிசி அங்கீகாரம் வழங்க மறுத்தது.

யுஜிசி உத்தரவை மீறிய பெரியார் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தியது. இதனால் தற்போது கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்பில் சேரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு விசாரிக்க பரிந்துரை செய்துள்ளது.

ஏற்கனவே பெரியார் பல்கலைக்கழகம் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாக புகார் எழுந்து அதோடு அந்த புகார் ஊத்திமூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது யுஜிசி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அந்த பல்கலைக்கழகத்தின் உண்மை முகத்தை வெளிகொண்டுவருவதாக அமைந்துள்ளதாக சேலம்வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.